’லில்லி ராணி’ திரைப்பட விமர்சனம்
Casting : Saya Singh, Thambi Ramaiah, Dushyanth, Jayaprakash
Directed By : Vishnu Ramakrishnan
Music By : Jerwin Joshuah and Cheran
Produced By : Clapin Cinemaas - Senthil Kandiar
விலைமாதுவான சாயா சிங்குடன் போலீசான தம்பி ராமையா உடலுறவு கொள்கிறார். சில மாதங்கள் கழித்து சாயா சிங் குழந்தைக்கு தாயாகிறார். பலருடன் உடலுறவு வைத்துக்கொண்ட சாயா சிங் தனது குழந்தைக்கு தந்தை யாராக இருப்பார், என்று குழம்பிக்கொண்டிருக்க, குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது. காப்பாற்ற பல லட்சங்கள் செலவாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதனால், தன்னிடம் உடலுறவு கொண்டவர்களில் குழந்தைக்கு தந்தை யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் சாயா சிங், தம்பி ராமையாவை தேடி பிடித்து அவரிடம் உதவி கேட்கிறார்.
ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்வதோடு, குழந்தை மருத்துவ செலவுக்கு தேவையான பணத்தை அமைச்சரின் மகனிடம் இருந்து பறிக்க திட்டம் ஒன்றை போடுகிறார். அந்த திட்டத்தின் மூலம் அமைச்சர் மகனிடம் இருந்து பணம் பறித்தார்களா? இல்லையா?, குழந்தையை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
படத்தின் மையக்கரு வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருந்தாலும் திரைக்கதை அமைப்பில் சில தடுமாற்றங்கள் இருப்பாதால், பல இடங்களில் சலிப்படைய செய்கிறது. இருந்தாலும் சில இடங்களில் படத்தை ரசிக்க முடிகிறது.
சாயா சிங் வித்தியாசமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் புதிய சாய சிங்கை பார்க்க முடிகிறது. அவரும் தன்னால் எவ்வளவு சிறப்பாக நடிக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார்.
வழக்கமான தனது உடல்மொழியினால் ஓவராக நடித்திருக்கும் தம்பி ராமையா சில இடங்களில் ரசிக்குபடி நடித்திருக்கிறார். அமைச்சரின் மகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சிவா தர்ஷன் மற்றும் இசையமைப்பாளர் ஜெர்வின் ஜோஸ்வா கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்கள். சேரனின் பின்னணி இசை கதையோடு பயணித்துள்ளது.
காமெடி காட்சிகள் சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் திணித்தது போல் வந்து கதையின் போக்கை மாற்றுகிறது. வசனங்களும் சில இடங்களில் காட்சியோடு ஒட்டாமல் பயணிப்பது குறையாக இருக்கிறது.
குறைகள் இருந்தாலும், அந்த குறைகளை மறந்து பல இடங்களில் ரசிக்கும்படி இயக்குநர் விஷ்ணு ராமகிருஷ்ணன் காட்சிகளை கையாண்டிருக்கிறார்.
மொத்தத்தில், ‘லில்லி ராணி’ புதிய களம்.
ரேட்டிங் 3/5