Apr 26, 2023 08:37 AM

‘மாவீரன் பிள்ளை’ திரைப்பட விமர்சனம்

8922bba977164a7abf7b37d3343defc7.jpg

Casting : KNR Raja, Radharavi, Vijayalakshmi Veerappan

Directed By : KNR Raja

Music By : Song : R avivarma, Back Round Score : Prem

Produced By : KNR Movies - KNR Raja

 

வழக்கறிஞரான கதையின் நாயகி விஜயலட்சுமி வீரப்பன், சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதே ஊரில் வசிக்கும் தெருக்கூத்து கலைஞர் ராதாரவியின் மகனான நாயகன் கே.என்.ஆர்.ராஜா, தந்தையுடன் சேர்ந்து கூத்து கலையில் ஈடுபட்டு வருவதோடு, விவசாயத்தையும் பார்த்துக்கொள்கிறார். ஆனால், அந்த ஊரில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் கஷ்ட்டப்படுவதோடு, ஆடு, மாடுகளும் தண்ணீர் இன்றி இறந்து போகிறது. அதே சமயம், அதே ஊரில் மது விற்பனை அமோகமாக நடைபெற அதனால், பலரது வாழ்க்கை சீரழிந்து போகிறது.

 

இந்த நிலையில், ராதாரவி தற்கொலை செய்துகொள்ள, அதற்கு முன்பு தனது மகன் ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தை படித்ததும் நாயகன் ராஜா, மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்வதோடு, அதற்காக அதரடி நடவடிக்க ஒன்றை எடுக்கிறார். அது என்ன நடவடிக்கை, அதனால் அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகியாக நடித்திருக்கும் விஜயலட்சுமி வீரப்பன், அறிமுக படம் என்பதால் அவரது நடிப்பை விமர்சிக்காமல் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கலாம். அதே சமயம், ஆரம்பத்தில் அவரை அதிரடியாக காட்டிவிட்டு பிறகு கதையுடன் பயணிக்க விடாமல் ஓரம் கட்டப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

 

படத்தை இயக்கி தயாரித்திருக்கும் கே.என்.ஆர்.ராஜா கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் கவர்கிறார். முதல் பாதியில் கூத்துக்கலைஞராக கவனம் பெறுபவர், இரண்டாம் பாதியில் மதுவை ஒழிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கையில் அமைதியாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்து விடுகிறார்.

 

ராதாரவியின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நாயகனின் அண்ணனாக நடித்திருப்பவர் பேசும் வசனங்கள் அனைத்தும் அரசுக்கும், நீதி துறைக்கும் சாட்டையடியாக அமைந்துள்ளது.

 

ஒளிப்பதிவாளர் மஞ்சுநாத் தண்ணீர் இல்லாத ஊரை கூட பசுமையாக காட்டி கண்களை குளிர்ச்சியடைய செய்கிறார்.

 

ரவி வர்மாவின் இசையில், ஆலயமணியின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் அமைந்துள்ளது. பிரேமின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.

 

படத்தை இயக்கி தயாரித்திருக்கும் கே.என்.ஆர்.ராஜா, சமூகத்திற்கு மிக அவசியமாக ஒரு படத்தை கொடுத்திருப்பதோடு, மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு படமாகவும் இயக்கியிருக்கிறார்.

 

படத்தின் சில இடங்களில் சில குறைகள் இருந்தாலும், அந்த குறைகளை பார்க்காமல் சமூக பொறுப்போடு இப்படத்தை இயக்கி தயாரித்திருக்கும் கே.என்.ஆர்.ராஜாவை தாராளமாக பாராட்டி ஊக்கப்படுத்தலாம்.

 

மொத்தத்தில், ‘மாவீரன் பிள்ளை’ இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3/5