Feb 17, 2024 03:31 PM

’மேடம் வெப்’ (Madame Web) திரைப்பட விமர்சனம்

a66975c6278d3f07446a4afa3699c853.jpg

Casting : Dakota Johnson, Sydney Sweeney, Isabela Merced, Celeste O'Connor, Tahar Rahim, Mike Epps, Emma Roberts, Adam Scott

Directed By : S. J. Clarkson

Music By : Johan Söderqvist

Produced By : Lorenzo di Bonaventura

 

நாயகி டகோடா ஜான்சன் தாயின் கருவில் இருக்கும் போது தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கப்படுகிறார். அதற்கான மருந்து அரிய வகை சிலந்தி ஒன்றின் மூலம் உருவாக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளும் அவரது நிறைமாத கர்ப்பிணித் தாய், அந்த சிலந்தியை தேடி வட அமெரிக்க நாடான பெருவுக்கு செல்கிறார். அங்குள்ள வனத்தில் பல நாட்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் அவர், அந்த அரிய வகை சிலந்தியை கண்டுபிடிக்க, அவரிடம் இருந்து வில்லன் அதை கைப்பற்றுவதோடு, அவரையும் கொலை செய்து விடுகிறார்.

 

அந்த அரிய வகை சிலந்தியின் மூலம் வில்லனுக்கு சக்தி கிடைப்பதோடு, அதன் மூலம் கிடைத்த விஷத்தை தனக்கு எதிரானவர்களை கொலை செய்ய பயன்படுத்தி வருகிறார். இதற்கிடையே, ஆம்புலன் ஓட்டுநராக பணியாற்றி வரும் நாயகி டகோடா ஜான்சன் விபத்தில் ஒன்றில் சிக்கிய பிறகு அவரிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதாவது, எதிர்காலத்தில் நடக்கும் சம்பவம் பற்றி அவருக்கு முன் கூட்டியே தெரிய வருகிறது. அதன்படி, ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மூன்று இளம் பெண்கள் வில்லனால் கொலை செய்யப்பட இருப்பதை நாயகி முன் கூட்டியே தெரிந்துக்கொள்வதோடு, அந்த இளம் பெண்களை காப்பாற்ற முயற்சிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா?, அந்த பெண்களுக்கும் நாயகிக்கும் என்ன தொடர்பு?, வில்லன் அந்த மூன்று பெண்களை எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் ‘மேடம் வெப்’ படத்தின் கதை.

 

உலகப்புகழ் பெற்ற மார்வெல் காமிக்ஸை தழுவி உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு சூப்பர் ஹீரோ படமான இதன் கதாபாத்திரங்களும், திரைக்கதையும் ஸ்பைடர் என்று சொல்லக்கூடிய சிலந்தியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அரியவகை சிலந்தி மட்டும் இன்றி, சிலந்தி மனிதர்கள் வாழ்வதாகவும் சொல்லப்படும் இந்த முதல் பாகத்தில் சாகசங்கள் பெரிதாக இல்லை என்றாலும், சிலந்தி மனிதர்கள் மற்றும் சிலந்தி பெண்களின் உருவாக்கம் பற்றிய அழுத்தமான கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மெளரோ ஃபியோர் (Mauro Fiore) காட்சிகளை பிரமாண்டமாக காட்டுவதை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

 

சூப்பார் ஹீரோ படம் என்றாலே அதற்கு என்ற தனியாக ஒரு பீஜியமை உருவாக்குவார்கள், அது அந்த படத்தின் முதல் அடையாளமாக திகழ்வதோடு, ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் செய்யும். ஆனால், இந்த படத்தில் அப்படி ஒரு பீஜியமை உருவாக்க இசையமைப்பாளர் ஜோஹன் சோடெர்க்விஸ்ட் தவறிவிட்டார். (Johan Soderqvist) ஒருவேளை அடுத்தடுத்த பாகங்களை அப்படிப்பட்ட பீஜியம் இருக்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

 

நாயகியாக நடித்திருக்கும் டகோடா ஜான்சன் மற்றும் மூன்று இளம் பெண்கள் அடுத்தடுத்த பாகத்தில் மாபெரும் சாகசங்களை நிகழ்த்த இருப்பதற்கான சுவடுகளை இதில் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் எஸ்.ஜே.கிளார்க்சன், இந்த முதல் பாகத்தை சிறுவர்களுக்கானதாக அல்லாமல் இளைஞர்களுக்கானதாக இயக்கியிருக்கிறார். குறிப்பாக நாயகியின் சக்தியை மையப்படுத்தி பயணிக்கும் திரைக்கதை, அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க வைக்கிறது. அதேபோல், மூன்று இளம் பெண்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் போதெல்லாம், அங்கு அதிரடியாக எண்ட்ரி கொடுத்துஅவர்களை  நாயகி காப்பாற்றும் காட்சிகளுக்கு விசில் சத்தம் காதல் பிளக்கிறது.

 

சூப்பர் ஹீரோ படம் என்றாலே பிரமாண்டமான சாகசங்கள் மட்டுமே இருக்கும் என்ற நிலையை மாற்றி, அழுத்தமான கதையோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த ‘மேடம் வெப்’ ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, இதன் அடுத்தடுத்த பாகங்கள் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

 

ரேட்டிங் 3/5