’மருத’ விமர்சனம்
Casting : Radhika Sarathkumar, Paruthiveeran Saravanan, Viji Chandrasekar, Vela Ramamoorthy, Marimuthu, GRS, Lovelin
Directed By : GRS
Music By : Ilayaraja
Produced By : Big Way Pictures - Sabapathy
மதுரையில் இருக்கும் செய்முறை என்ற கலாச்சாரத்தால் உறவுகளுக்கு இடையே ஏற்படும் போட்டிகளையும் அதனால் எழும் பிரச்சனைகளையும் மையமாக வைத்துக்கொண்டு காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்வது தான் ‘மருத’ படத்தின் கதை.
மதுரை மண்ணின் கலாச்சார பெருமைகளை பல படங்கள் பேசியிருந்தாலும், அம்மக்கள் பெருமையாக கருதும் செய்முறை கலாச்சாரம் எத்தகைய ஆபத்துகளை உருவாக்குகிறது, என்பதை மிக அழுத்தமாக பேசியிருக்கும் படம், அம்மக்களுக்கு மறைமுக எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜி.ஆர்.எஸ் முதல் படம் போல் அல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிப்பால் அசத்தியிருப்பதோடு, காமெடி, செண்டிமெண்ட், காதல் என அனைத்து ஏரியாக்களிலும் அதிரடி காட்டி தன்னை ஆல் ரவுண்டராகவும் நிரூபித்திருக்கிறார். நாயகனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகரின் நடிப்பும் நிறைவு.
காளி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விஜி சந்திரசேகரின் நடிப்பு பயங்கரம். தோற்றத்திலும், நடிப்பிலும் காளியை வெளிக்காட்டி நடித்திருக்கும் அவரது நடிப்பு அலற வைக்கிறது.
பருத்திவீரன் சரவணன், அவரது தங்கையாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், மாரிமுத்து, வேலராமமூர்த்தி என அனைத்து நடிகர்களின் நடிப்பிலும் மதுரை மண் மனம் வீசுவதோடு, அம்மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளில் வரும் கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கிறார்.
பட்டுக்கோட்டை ரமேஷ்.பி-யின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஜி.ஆர்.எஸ் மதுரை மக்களின் வாழ்வியலில் பின்னி பிணைந்திருக்கும் செய்முறை கலாச்சாரத்தின் பின்னணியில் இருக்கும் வெட்டி கவுரவத்தையும், அதனால் ஏற்படும் வீன் வம்புகளையும் வெட்டவெளிச்சமாக்கியிருப்பதோடு, அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
பெருமைக்காக செய்முறை செய்துவிட்டு கடனாளியாக தவிப்பவர்களின் கண்ணீரையும், செய்முறை என்ற பெயரில் கந்துவட்டிக்காரர்களாக செயல்படுபவர்களின் கொடுமையையும் தைரியமாக பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. படத்தின் நீளத்தை குறைத்து, காட்சிகளில் சற்று விறுவிறுப்பை கூட்டியிருந்தால் மக்கள் பெரிய அளவில் கொண்டாடும் படமாகியிருக்கும்.
மொத்தத்தில், ‘மருத’ மதுரை மக்களை திருத்த
ரேட்டிங் 3/5