’மைக்கேல்’ திரைப்பட விமர்சனம்
Casting : Sundeep Kishan, Vijay Sethupathi, Divyansha Kaushik, Gautham Vasudev Menon, Varun Sandesh
Directed By : Ranjit Jeyakodi
Music By : Sam.CS
Produced By : Bharath Chowdary, Pushkar Ram Mohan Rao
பெரிய தாதாவாக வேண்டும் என்ற லட்சியத்தோடு மும்பை செல்கிறார் நாயகன் சந்தீப் கிஷன். ஏற்கனவே மும்பையில் பெரிய தாதாவாக இருக்கும் கெளதம் மேனனை பெரிய ஆபத்தில் இருந்து சந்தீப் கிஷன் காப்பாற்றுகிறார். இதனால் கெளதம் மேனனின் நம்பிக்கைக்கு உரியவராகும் சந்தீப் கிஷனுக்கு பல பொறுப்புகளும் கொடுக்கப்படுகிறது. கெளதம் மேனன் கொடுத்த போறுப்புகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் சந்தீப் கிஷன், நாயகி திவ்யான்ஷா மீது காதல் கொள்கிறார்.
இதற்கிடையே நாயகி திவ்யான்ஷாவுக்கு சில பிரச்சனைகள் வர, அதில் இருந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் சந்தீப் கிஷன் ஈடுபட, கெளதம் கொடுத்த பணிகளை செய்ய தவறுகிறார். இதனால் கோபமடையும் கெளதம் மேனனின் எதிரி பட்டியலில் சந்தீப் கிஷன் சேர, இறுதியில் என்ன நடந்தது? என்பதை காலம் காலமாக சொல்லும் கேங்க்ஸ்டர் பாணியில் சொல்லியிருப்பதே ‘மைக்கேல்’.
ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டுக்கும் ஏற்ற ஹீரோவாக சந்தீப் கிஷன் வலம் வருகிறார். குறைவான வசனங்கள் பேசினாலும், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுபவர் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தன்னை பல இடங்களில் முன்னிலை படுத்துக்கொள்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் திவ்யான்ஷா கவுசிக், காதல் காட்சிகளில் தாராளம் காட்டியிருப்பவர், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகவும் இருக்கிறார்.
வில்லனாக மிரட்டும் இயக்குநர் கெளதம் மேனன், பொருத்தமான வேடத்தில் அமர்க்களமாக நடித்திருக்கிறார்.
கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரது கதாபாத்திரம் கவனம் பெறுவதோடு, அவர்கள் வரும் இடங்கள் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுக்கிறது.
கிரண் கவுசிக்கின் ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டல். 90 களில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைக்கு ஏற்றபடி வண்ணங்களை பயன்படுத்தி காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் ரஞ்சித் ஜெயக்கொடி, ஒரு கேங்ஸ்டர் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அதையெல்லாம் வைத்து படத்தை கமர்சியலாக இயக்கியிருக்கிறார்.
வழக்கமான பாணியில் கதை சொல்லப்பட்டிருந்தாலும், கதாபாத்திரங்களை கையாண்ட விதம், மேக்கிங் ஆகியவற்றால் மற்ற கேங்க்ஸ்டர் படங்களில் இருந்து சற்று தனித்தி நிற்கும் படம் ரசிக்கவும் வைக்கிறது.
மொத்தத்தில், ‘மைக்கேல்’ மிரட்டல்.
ரேட்டிங் 3/5