Dec 10, 2022 06:59 AM

’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

6cc6ab65a662e5f0521e4594cbbc7ffb.jpg

Casting : Vadivelu, Anandaraj, Munishkanth, Redin Kingsly, Shivangi, Shivani, Vela Ramamurthy, Sachu

Directed By : Suraaj

Music By : Santhosh Narayanan

Produced By : Lyca Productions - Subashkaran

 

வடிவேலுவின் தந்தை வேல ராமமூர்த்திக்கு பைரவர் கோவிலில் அதிசய நாய் ஒன்று கிடைக்கிறது. அந்த நாய் வந்த அதிஷ்ட்டத்தால் அவர் பெரிய பணக்கார் ஆகிவிடுகிறார். ஆனால், வடிவேலு வளர்ந்த பிறகு அவர்கள் வறுமையில் கஷ்ட்டப்படுவதோடு, நாய்களை திருடி வடிவேலு பிழைப்பு நடத்துகிறார்.

 

இதற்கிடையே, வடிவேலு குடும்பத்தில் இருந்த அதிசய நாயை அவர்களது வேலைக்காரர் திருடி சென்றுவிட்டதால் தான் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று அவரது பாட்டி சொல்ல, திருடப்பட்ட தங்களது அதிசய நாயை தேடி செல்லும் வடிவேலு அதை கண்டுபிடித்து மீட்டாரா? இல்லையா? என்பதை காமெடியாக சொல்வது தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.

 

கதையின் நாயகனாக களம் இறங்கியிருக்கும் வடிவேலு படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை தனது வழக்கமான பாணியில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். வடிவேலு வந்து நின்றாலே சிருக்கும் ரசிகர்கள், பல இடங்களில் அமைதியாக இருப்பது பெரிய ஏமாற்றமாக இருந்தாலும், சில இடங்களில் வயிறு வலிக்க சிறிக்க வைக்கும் வடிவேலு தான் ரிட்டர்ன்ஸ் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

வடிவேலுவின் காமெடியை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கிறார் ஆனந்தராஜ். அவர் வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு வெடி.

 

வடிவேலு கூட வரும் குக் வித் கோமாளி புகர் சிவாங்கி, யூடியூபர் பிரசாந்த் ஆகியோர் கடுப்பேற்றினாலும், ரெடிங் கிங்ஸ்லியின் காட்சிகள் ஆறுதல் அளிக்கிறது.

 

ராமர், முனிஷ்காந்த், பாலா, தங்கதுரை, பூச்சி முருககன், ஷிவானி என படத்தில் ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்கள் இருந்தாலும் காமெடி காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருப்பது பெருத்த ஏமாற்றம். 

 

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் கலர்புல்லாக இருப்பதோடு, பிரமாண்டமாகவும் இருக்கிறது

 

சந்தோஷ் நாராயணைன் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்தாலும், அவர் சரியான இடத்தில் இடம்பெறாததால் படத்தில் திணிக்கப்பட்டது போல் இருக்கிறது.

 

முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சுராஜ், வழக்கமாக வடிவேலுடன் பயணிக்கும் நடிகர்களை தவிர்த்துவிட்டு தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு புதிய நடிகர்களை பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அதிகமான நடிகர்களின் கூட்டமே படத்திற்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது.

 

மொத்தத்தில், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ ஏமாற்றம்

 

ரேட்டிங் 3/5