’நானும் சிங்கிள் தான்’ விமர்சனம்
Casting : Dinesh, Deepthi, Kathir, Mottai Rajendran, Manobala, Rama
Directed By : R.Gopi
Music By : Hithesh Manjunath
Produced By : Punnagai Poo Geetha
ஆண்கள் என்றாலே பிடிக்காத ஹீரோயின் தீப்தி, சிங்கிளாக வாழ வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். நயன்தாரா போன்ற அழகான பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய வேண்டும், என்ற லட்சியத்தோடு வாழும் ஹீரோ தினேஷ், தீப்தியுடன் மிங்கிள் ஆவதற்காக, அவரை துறத்தி துறத்தி காதலிக்கிறார். தினேஷின் காதல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஹீரோயின் தீப்தி எடுக்கும் அதிரடி முடிவும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காமெடியாக சொல்லியிருக்கிறார்கள்.
எப்போதும் ஒரு வித ஏக்கத்தோடு இருக்கும் தினேஷின் முகம், காதலுக்காகவும், கல்யாணத்துக்காகவும் ஏங்கும் இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. கதாநாயகியாக நடித்திருக்கும் தீப்தி, நயன்தாரா போல இல்லை என்றாலும், நடிப்பில் அசத்துகிறார்.
மொட்டை ராஜேந்திரன், ஆதித்யா கதிர், விகாஷ் சம்பத், செல்வேந்திரன் ஆகியோர் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். மனோபாலா, ரமா ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஹித்தேஷ் மஞ்சிநாத்தின் இசையும், கே.ஆனந்தராஜின் ஒளிப்பதிவும் அளவாக இருக்கிறது.
காதலும், காமெடியும் கலந்த பழங்காலத்து கதையை புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஆர்.கோபி, காதலை விட காமெடிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, காதலர்களை விட நண்பர்களின் கதாப்பாத்திரங்களை பேசவிட்டு காட்சிகளை நகர்த்துவதால், காதல் காணாமல் போவதோடு, சில இடங்களில் தொய்வும் ஏற்படுகிறது. இருப்பினும், படத்தின் கடைசியில் இயக்குநர் சொல்லியிருக்கும் விஷயம் புதிதாக இருப்பதோடு சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
ரேட்டிங் 2.75/5