Dec 11, 2021 05:33 PM

’ஊமைச் செந்நாய்’ விமர்சனம்

c04f047d1cd09ca0eb4bf438f3cc2efa.jpg

Casting : Michel Thangadurai, Sanam Shetty, Gajaraj, Arul Shankar

Directed By : Arjunan Ekalaivan

Music By : Siva

Produced By : Life Goes On Pictures

 

பெரிய மனிதர்களை பின் தொடரும் துப்பறியும் நிறுவனத்தில் நாயகன் மைக்கேல் பணிபுரிகிறார். துப்பறியும் நிறுவனம் என்ற பெயரில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் அந்நிறுவனத்திடம் இருந்து ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் மைக்கேல் ஈடுபட, அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை சஸ்பென்ஸாக சொல்வது தான் ‘ஊமைச் செந்நாய்’.

 

எப்போதும் இறுக்கமாக இருக்கும் நாயகன் மைக்கேல், கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் சனம் ஷெட்டி, மேக்கப் இல்லாமல் சாதாரணமாக வலம் வருவதோடு, இயல்பாகவும் நடித்திருக்கிறார். 

 

துப்பறியும் நிறுவனத்தை நடத்தும் முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கஜராஜ், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள் சங்கர், சேது என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன் இன்னும் கூட மெனக்கெட்டு இருக்கலாம். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கதாப்பாத்திரங்கள் பேசும் போது கேமரா அவர்களை கடந்து பயணிப்பது ஏன்? என்று தான் தெரியவில்லை.

 

சிவாவின் இசையில் பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.

 

சஸ்பென்ஸ் படமாக இருந்தாலும், பரபரப்பு இல்லாமல் காட்சிகளை அமைதியாக நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அதுல் விஜய்.

 

துப்பறியும் நிறுவனத்தை கதைக்களமாக வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் இழைக்கும் துரோகங்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நேர்த்தியான சஸ்பென்ஸ் படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் அர்ஜுனன் ஏகலைவன், நாயகன், நாயகி இடையிலான காதலை அழகாக சொல்லியிருக்கிறார்.

 

படத்தின் பெரும்பாலான காட்சிகளும், கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பும் இயக்குநர் மிஷ்கின் படங்களை அப்பட்டமாக நினைவு படுத்துகிறது.

 

கண்டய்னருக்குள் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் தனது கடின உழைப்பை வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மிகப்பெரிய ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் படமாக இருந்திருக்கும்.

 

மொத்தத்தில், ‘ஊமைச் செந்நாய்’ நல்ல முயற்சி

 

ரேட்டிங் 3/5