’பாரிஸ் ஜெயராஜ்’ விமர்சனம்
Casting : Santhanam, Anaika Chotty, Prithviraj, Mottai Rajendran, Maran
Directed By : Johnson
Music By : Santhosh Narayanan
Produced By : Lark Studios
வட சென்னையை சேர்ந்த கானா பாடகரான சந்தானம், ஹீரோயின் அனைகா சோட்டியை காதலிக்கிறார். அவரும் சந்தானத்தை காதலிக்க, இவர்களது காதலுக்கு விசித்திரமான சிக்கல் ஏற்படுகிறது. அது என்ன சிக்கல், அந்த சிக்கலால் சந்தானத்தின் காதல் என்னவானது, என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறார்கள்.
நக்கல், நையாண்டி பேச்சுடன், சென்னை பேச்சையும் கலந்துக்கட்டி கலக்கும் சந்தானம், காமெடி காட்சிகளுடன், காதல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அனைகா சோட்டி, கொடுத்த வேலையை குறை வைக்காமல் செய்திருக்கிறார்.
சந்தானத்தின் அப்பா கதாப்பாத்திரம் பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் நடிக்க வேண்டி பலமான வேடம். அதனால் தான் அவரைப்போலவே இருக்கும் ப்ருத்விராஜ் என்ற நடிகரை பிரகாஷ்ராஜ் என்ற பெயரிலேயே நடிக்க வைத்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பார்த்திராத முகமாக இருந்தாலும், ப்ருதிவிராஜ் அசால்டாக நடித்து அப்ளாஷ் பெருகிறார்.
மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, மாறன் கூட்டணியின் காமெடி காட்சிகள் சிரிக்க வைத்தாலும், மாறனின் வசனங்கள் குபீர் சிரிப்பை வரவைக்கிறது.
சந்தோஷ் நாராயணின் இசையில் அனைத்து பாடல்களும் கானா பாடல்கள் தான். அனைத்தும் தாளம் போட வைத்தாலும், பின்னணி இசையில் வரும் தீம் மீயூசிக் மனதில் நின்று விடுகிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஜான்சன், பழைய கதையை நகைச்சுவையாக சொல்லி வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்.
முதல் பாதி வழக்கமான காமெடி காட்சிகளுடன் சற்று நொண்டியடித்தாலும், திரைக்கதையில் வைத்த திருப்புமுனையால் இடைவேளைக்குப் பிறகு படம் வேகம் எடுப்பதோடு, ரகசியம் எப்போது தெரிய வரும் என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்படுகிறது.
ரேட்டிங் 3/5