Jan 03, 2020 01:51 PM

‘பிழை’ விமர்சனம்

c2dcc9156e23913573a90ff60113d260.jpg

Casting : Kakka Muttai Ramesh, Appa Nasath, Gokul, Ragavendra, Mime Gopi, Charly, George, Kalluri Vinoth

Directed By : Rajavel Krishna

Music By : F.S. Fisal

Produced By : Turning Point Production - R.Dhamodharan

 

பெறோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே நல்ல புரிதல் இல்லாததால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசும் ‘பிழை’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் ஆகியோர் கல் குவாரியில் கல் உடைக்கும் வேலையை செய்து வருகிறார்கள். தங்களைப் போல், தங்களது பிள்ளைகளும் கஷ்ட்டப்படக் கூடாது என்பதற்காக, தங்களது பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், என்று அவர்களிடம் கண்டிப்பு காட்டுகிறார்கள். ஆனால், பெற்றோர்களின் கண்டிப்பை தவறாக புரிந்துக் கொள்ளும் அவர்களது பிள்ளைகள், படிப்பை விட பணம் சம்பாதித்தால் தான் நம்மை மதிப்பார்கள், என்று நினைத்து சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி, சில தவறான மனிதர்களிடம் சிக்கி சிதைந்து போகிறார்கள். அதன் பிறகு பெற்றோர்களின் அருமையையும், படிப்பின் முக்கியத்துவதை அறிந்துக் கொள்ளும் அந்த சிறுவர்கள் மீண்டும் தங்களது பெற்றோர்களிடம் சேர்ந்தார்களா, இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

பெறோர்களின் கண்டிப்பை புரிந்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு பாடம் சொல்லியிருக்கும் இப்படம், அதே பிள்ளைகளை பெற்றோர்கள் மட்டும் இன்றி, ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூகமே புரிந்து அவர்களுக்கு சரியான முறையில் புத்தி சொல்லி நல்வழிப்படுத்த வேண்டும், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

 

மைம் கோபி, ஜார்ஜ், சார்லி ஆகியோர் கூலித்தொழிலாளிகளின் துன்பங்களையும், அவர்கள் தங்களது பிள்ளைகளாவது நம்மை போல் கஷ்ட்டப்படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தங்களது நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

சிறுவர்கள் ’காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நாசத், கோகுல் ஆகியோர் கிராமத்து பள்ளி மாணவர்களின் சேட்டைகளை இயல்பாக வெளிப்படுத்துவதோடு, தவறானவர்களிடம் சிக்கி கஷ்ட்டப்படும் போது, கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஊர் தலைவராக நடித்திருக்கும் தாமோதரன், ‘கல்லூரி’ வினோத் ஆகியோரும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

Pizhai Movie Review

 

எப்.எஸ்.பைசலின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பாக்கியின் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக உள்ளது.

 

இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா, தான் சொல்ல வந்த கருத்தை கமர்ஷியலாக சொல்லியிருந்தாலும், திரைக்கதையை கண்ணியத்தோடு கையாண்டிருக்கிறார். பெற்றோர்களின் கண்டிப்பை அடக்குமுறை என்று பிள்ளைகள் தவறாக நினைப்பதால், அவர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறிப்போகிறது என்பதை இயக்குநர் சொல்லிய விதம் மனதை பதபதைக்க வைக்கிறது.

 

கமர்ஷியல் விஷயத்தில் சில ‘பிழை’கள் இருந்தாலும், படத்தின் கருவுக்காக அத்தனை பிழைகளையும் மறந்துவிட்டு, இந்த ‘பிழை’ படத்தை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2.5/5