Jan 25, 2020 06:48 AM

‘ராஜாவுக்கு செக்’ விமர்சனம்

9e641abeb16b48cebfde645753781872.jpg

Casting : Cheran, Irfan, Srushti Dange, Gowri Nandana, Sarayu Mohan

Directed By : Sai Rajkumar

Music By : Vinod Yajamaanyaa

Produced By : Soman Pallette, Thomas Kokkatt

 

சிபிசிஐடி போலீஸ் அதிகாரியான சேரன், ஒரு பெண்ணை காப்பாற்ற நான்கு இளைஞர்களை தண்டிக்கிறார். அந்த நான்கு இளைஞர்களும் சேரனை பழி வாங்க, அவருக்கு செக் வைக்க, அதை சேரன் எப்படி தகர்க்கிறார், என்பது தான் படத்தின் கதை.

 

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இப்படம், பல ட்விஸ்ட்டுகளோடு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் இருக்கிறது.

 

காவல் துறை அதிகாரியாகவும், பாசமுள்ள தந்தையாகவும் சேரன் தனது பணியை நூறு சதவீதம் செய்திருக்கிறார். ஒரே இடத்தில் உட்கார்ந்துக் கொண்டு மகளின் நிலையை நினைத்து வருந்தும் சேரனின் எக்ஸ்பிரஷன்களும், நடிப்பும் நம்மை நகம் கடிக்க செய்துவிடுகிறது. 

 

சேரனின் மகளாக நடித்திருக்கும் கெளரி நந்தனா இயல்பாக நடித்திருக்கிறார். சேரனின் மனைவியாக நடித்திருக்கும் சரயு மோகனும் தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார்.

 

இர்பான் மற்றும் அவரது நண்பர்கள் படம் பார்ப்பவர்கள் கோபமடையும் அளவுக்கு தங்களது வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்கள்.

 

வினோத் எஜமான்யாவின் இசையில் பாடலும், பின்னணி இசையும் கதையோடு பயணித்திருக்கிறது. எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், சி.எஸ்.பிரேம்குமாரின் படத்தொகுப்பும் காட்சிகளுக்கு விறுவிறுப்பை சேர்த்திருக்கிறது.

 

இயக்குநர் சாய் ராஜ்குமார், பெண்களை எச்சரிக்கும் விதமான ஒரு கருவை, விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக கொடுத்திருக்கிறார். அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்புடன் திரைக்கதையை சஸ்பென்ஸாக நகர்த்தியிருந்தாலும், ஒரு கட்டத்தில் படத்தில் சற்று தொய்வு ஏற்பட்டு விடுகிறது. பிறகு, சேரனின் அதிரடி நடவடிக்கையால், மீண்டும் நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.

 

ரேட்டிங் 3/5