’சிவி 2’ விமர்சனம்
Casting : Yogi, Tej, Swathisha, Santhosh, Christin, Gayathri, Sams, Kothandam, Kumaran, Thadi Balaji
Directed By : KR Senthilnathan
Music By : Faizal
Produced By : Thulasi Cine Arts
பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் மருத்துவமனைக்குள் செல்லும் மாணவ, மாணவிகள் அங்கு பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அங்கு நடக்கும் சம்பவங்களை நேரலையாக ஒளிபரப்பு செய்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது? அங்கு பேய் இருக்கிறாதா? இல்லையா? என்பதை நாம் பயப்படும் வகையில் சொல்வது தான் ‘சிவி 2’.
யோகி, தேஜ், சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், காயத்ரி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். துடிப்புடன் பூட்டியிருக்கும் மருத்துவமனைக்குள் செல்லும் இவர்கள், பிறகு அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை கண்டு மிரள்வது, அலறுவது என அனைத்தையும் மிக சரியாக செய்திருக்கிறார்கள்.
போலீஸாக வரும் தாடி பாலாஜி, கணினி வல்லுநராக வரும் சாம்ஸ், கோதண்டம், குமரன் என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
சஞ்சயின் ஒளிப்பதிவு பயமுறுத்தியிருக்கிறது. ஃபைசலின் இசை பேய் படங்களுக்கு ஏற்றவாறு பின்னணி இசையை கொடுத்து பதற வைக்கிறது.
பேய் நடமாடுவதையும், பேய் வீடுகளையும் நேரடியாக ஒளிபரப்பும் யூடியூபர்கள் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் போது, எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது என்ற மெசஜோடு, ஒரு சுவாரஸ்யமான பேய் கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கே.ஆர்.செந்தில்நாதன்.
காமெடி காட்சிகள் நிறைந்த பேய் படங்களை பார்த்து சலிப்படைந்த சினிமா ரசிகர்களை காட்சிக்கு காட்சி அலற வைப்பதோடு, முழு படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் முழுமையான திகில் படமாகவும் இப்படத்தை இயக்குநர் செந்தில்நாதன் இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘சிவி 2’ சீரியஸான பேய் படம்.
ரேட்டிங் 3/5