’ஸ்பைடேர் மேன் : அக்ராஸ் தி ஸ்பைடேர் வெர்ஸ்’ திரைப்பட விமர்சனம்
Casting : Shameik Moore (voice of Spider-Man), Hailee Steinfeld (Gwen Stacey), Brian Tyree Henry, Luna Lauren Velez, Jake Johnson, Jason Schwartzman, Issa Rae, Karan Soni, with Daniel Kaluuya and Oscar Isaac.
Directed By : Joaquim Dos Santos, Kemp Powers and Justin K. Thompson
Music By : Marvel Studios
Produced By : Marvel Studios
உலக அளவில் புகழ் பெற்ற மார்வல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோவான ஸ்பைடேர் மேன் பல வகையில், வெவ்வேறு கதைக்களங்களில் திரைப்படங்களாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடேர் மேன் : இண்டூ தி ஸ்பைடர் வெர்ஸ்’ எனும் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் அனிமேஷன் படம் தான் ’ஸ்பைடேர் மேன் : அக்ராஸ் தி ஸ்பைடேர் வெர்ஸ்’. இந்த படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
ஸ்பைடேர் மேன் ப்ரூக்ளின், முழுநேர ஸ்பைடர் மேனான மைல்ஸ் மொரால்ஸ், க்வென் ஸ்டேசியுடன் மீண்டும் இணைவதோடு, பல அண்டங்களில் இருந்து ஒன்றிணைந்த ஸ்பைடர் உலகில் நுழைகிறார். உலகை அச்சுறுத்தும் ஆபத்துகளில் இருந்து உலக மக்களை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஸ்பைடர் மேன் உலகம், புதிய அச்சுறுத்தல் ஒன்றினால் ஸ்பைடேர் மேன் ப்ரூக்ளினின் தந்தை மரணமடைய இருப்பதை முன் கூட்டியே அறிந்துக்கொள்கிறது. ஆனால், அவரை காப்பாற்ற முடியாது என்பதையும் அவர்கள் நம்புகிறார்கள். அப்படி அவரை காப்பாற்ற முயற்சித்தால், பல கோடி மக்களுக்கு எதிரானதாக அது அமையும் என்ற முடிவுக்கும் வருகிறார்கள். அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்ளாத ப்ரூக்ளின், உலக மக்களையும், தனது தந்தையையும் தன்னால் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார். ஆனால், அவரது நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் ஸ்பைடேர் மேன் உலகம் தடையாக இருக்க, அவர்களை எதிர்த்துக்கொண்டு தனது தந்தையை காப்பாற்ற பயணிக்கும் ப்ரூக்ளின் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
ஒரு ஸ்பைடேர் மேன் என்றாலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், இந்த படத்தில் ஏகப்பட்ட ஸ்பைடேர் மேன்கள் வருகிறார்கள். டையனோசர் கூட ஒரு ஸ்பைடேர் மேனாக வந்து அமர்க்களப்படுத்துகிறது.
அனிமேஷன் படம் என்றாலும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வியக்க வைக்கும் விதத்தில் இருப்பதோடு, ஒரு காமிக்ஸ் புத்தகம் படிக்கும் உணர்வை கொடுக்கிறது. குறிப்பாக படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணங்கள் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கிறது.
Joaquim Dos Santos, Kemp Powers and Justin K. Thompson ஆகியோரது இயக்கத்தில், Alan Hawkins-ன் கதாபாத்திர கிராபிக்ஸ் காட்சிகள் சிறுவர்களை கொண்டாட வைக்கும் விதத்தில் இருக்கிறது.
ஸ்பைடேர் மேன் படங்களின் ரசிகர்களுக்கு இந்த படம் புதிய அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் இருந்தாலும், புதிதாக பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் புரியாதபடி இருக்கிறது.
மொத்தத்தில், ஸ்பைடேர் மேன் பட ரசிகர்களை கொண்டாட வைக்கும் இந்த ஸ்பைடேர் மேன் : அக்ராஸ் தி ஸ்பைடேர் வெர்ஸ்’
ரேட்டிங் 3/5