Dec 30, 2021 03:01 AM

’தண்ணி வண்டி’ விமர்சனம்

5740ff9ac3384fc1c3e303002e722aa3.jpg

Casting : Umapathy Ramaiah, Samskruthi, Thambi Ramaiah, Bala Saravanan, Vinudha Lal

Directed By : Manika Vidya

Music By : Moses

Produced By : Sri Saravana Film Arts - G.Saravanaa

 

வாகனம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வரும் நாயகன் உமாபதி ராமையாவுக்கு, சலவை மற்றும் உலர் சலவை நிறுவனம் நடத்தி வரும் நாயகி சம்ஸ்கிருதி மீது காதல் வருகிறது. பிறக நாயகன் மூலமாகவே நாயகிக்கு பிரச்சனை வர, அந்த பிரச்சனையில் இருந்து நாயகன் நாயகியை எப்படி காப்பாற்றுகிறார், என்பதை காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருப்பது தான் ‘தண்ணி வண்டி’ படத்தின் கதை.

 

நாயகன் உமாபதி ராமையா சண்டைக்காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் உற்சாகத்தோடு செயல்படுகிறவர், நடிப்பிலும் குறையில்லாமல் தன் வேலையை செய்திருக்கிறார்.

 

நாயகி சம்ஸ்கிருதி இளமை ததும்பும் அழகோடு ரசிகர்களை கவர்வதோடு, தனது துள்ளல் நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கொள்ளையடிக்கிறார்.

 

உமாபதியின் அப்பாவாக நடித்திருக்கும் அவரது ஒரிஜினல் அப்பாவான தம்பி ராமையா, தனது ரெகுலர் காமெடியோடு பயணித்திருக்கிறார். ஆனால், அது படத்திற்கு போதுமானதாக இல்லை.

 

வில்லியாக நடித்திருக்கும் வினுதா லால் அதிரடியான நடிப்பால் அமர்க்களப்படுத்துகிறார். பால சரவணனின் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு நம்மை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

 

தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, விதுலேகா, சேரன் ராஜ் என அனைவரும் கொடுத்த வேலை சரியாக செய்து விட்டு போகிறார்கள். சில காட்சிகளில் வரும் மதுரை முத்து, ஜார்ஜ் ஆகியோரது காட்சிகளால் ஓரளவு சிரிக்க முடிகிறது.

 

மோசஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறும் பயணித்துள்ளது. எஸ்.என்.வெங்கட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

வழக்கமான கதை தான் என்றாலும், அதை காமெடி உள்ளிட்ட கமர்ஷியல் மசாலாவை கலந்து பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் மாணிக்க வித்யா, அதை சரியான பதத்தில் கொடுக்க தவறிவிட்டார். குறிப்பாக படத்தில் வரும் காமெடி காட்சிகள் பெரிதாக எடுபடாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

 

மொத்தத்தில், ‘தண்ணி வண்டி’ தறிகெட்டு ஓடும் பழுதடைந்த வண்டி

 

ரேட்டிங் 2/3