வி விமர்சனம்
Casting : Raghav, Luthiya, Divyan, RNR Manohar, Sabitha Anand
Directed By : Davincy
Music By : Elango Kalaivanan
Produced By : True Sol Pictures Rupesh Kumar
ஐந்து காதல் ஜோடிகள் சுற்றுலா செல்லும் போது வழியில் பிரச்சினை ஒன்றை எதிர்கொள்கிறார்கள். அதில் இருந்து தப்பிப்பதற்காக அங்கே இருக்கும் ஓட்டல் ஒன்றில் அவர்கள் தங்க, அந்த இடத்தில் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.
ஒரே இடத்தில், ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும், படம் முழுவதும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது. காதல் ஜோடிகளை விரட்டும் லாரியில் தொடங்கும் விறுவிறுப்பு அவர்கள் ஒட்டலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது அதிகரிப்பதோடு, காதல் ஜோடிகளை கொலை செய்யும் மர்மம் யார்? என்ற எதிர்பார்ப்பு நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது.
காதல் ஜோடிகளாக நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருந்தாலும், ராகவ் தனது நடிப்பு மூலம் கவனம் பெருகிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் லுதியா, ஆர்.என்.ஆர்.மனோகர், சபிதா ஆனந்த் ஆகியோரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இளங்கோ கலைவாணனின் இசை கதையுடன் பயணித்துள்ளது. அணில் கே.சாமியின் ஒளிப்பதிவில் சேசிங் காட்சி மிரட்டுவதோடு, இரவு காட்சிகள் கூடுதல் பரபரப்பை கொடுக்கிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை சமூக அக்கறையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் டாவின்சியை பாராட்டியாக வேண்டும். தான் சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லியதோடு, அதை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் பின்னணியில் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
ரேட்டிங் 3/5