Dec 18, 2021 05:56 PM

’வரிசி’ விமர்சனம்

7e21f5f3f071dd17561b4f5b2fe05d37.jpg

Casting : Karthik Dass, Sapna Doss, Anupama Kumar, Krishna

Directed By : Karthik Dass

Music By : Nanda

Produced By : Chandrasekar.M

 

ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் கடத்தி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட, அந்த வழக்கை சிபிஐ அதிகாரி கிருஷ்ணா விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஐடி துறையில் பணியாற்றும் கதாநாயகியும் கடத்தப்பட, அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் நாயகன் கார்த்திக் தாஸ், குற்றவாளியை பிடித்தாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக் தாஸ், புதுமுகம் என்பது தெரியாதவாறு கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அளவாக நடித்து அப்ளாஷ் பெறுகிறார். 

 

கதாநாயகியாக நடித்திருக்கும் சப்னா தாஸ், கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, ரொமான்ஸ் காட்சிகளில் பாராட்டு பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்.

 

சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் கிருஷ்ணா, கார்த்திக்கின் நண்பர்களாக நடித்திருக்கும் அவிஸ் மனோஜ், கணேஷ், அனுபமா உள்ளிட்ட அனைவரும் அளவான நடிப்பால் கவர்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் மிதுன் மோகனின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நந்தாவின் இசையில் பாடல்கள் புரியும்படி இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.

 

காதல் கலந்த கமர்ஷியல் படத்தை க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர், தனியாக இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில், சோசியல் மீடியாவை சிலர் எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள், அதனால் பிறர் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை பேசும் படம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபகிறவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், என்றும் வலியுறுத்துகிறது.

 

புதிய குழுவினரின் புதிய முயற்சியினாலும், கடுமையான உழைப்பினாலும் உருவாகியிருக்கும் இப்படத்தில் சில சிறு சிறு குறைகள் இருந்தாலும், சமூக பிரச்சனையை பேசும் கதைக்களத்திற்காக அவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘வரிசி’ நல்ல முயற்சி.

 

ரேட்டிங் 2.5/5