Dec 27, 2023 06:35 PM

’வட்டார வழக்கு’ திரைப்பட விமர்சனம்

dd8b35639ed5f65d41e3e9a1b5418636.jpg

Casting : Santhosh Nambhirajan, Raveena Ravi, Vijay Sathya, Paruthiveeran Venkatesh, Viji, Subramaniyapuram Vichithran, Jet Prasanna, Murugesan, Eswaran

Directed By : Kannusamy Ramachandran

Music By : Ilayaraja

Produced By : Kannusamy Ramachandran

 

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருட பகை இருக்க, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார். இதனால், அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாயகனை பழிவாங்க முயற்சிக்க, அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை எதார்த்தமாக சொல்வது தான் ‘வட்டார வழக்கு’.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பீராஜன், மிக இயல்பாக நடித்திருப்பதோடு, கடும்கோபம் மற்றும் காதலை மிக இயல்பாக கடத்தும் விதத்தில் அசத்துகிறார். நாயகியாக நடித்திருக்கும் ரவீனா ரவி தொட்டச்சி என்ற வேடத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

 

மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலானவர்கள், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுடைய நடிப்பு செயற்கைத்தனம் அற்ற வாழ்வியலாக இருப்பதோடு, படத்தின் தனி சிறப்பாகவும் பயணிக்கிறது.

 

இளையராஜாவின் இசையில் காதல் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. ராஜாவின் பின்னணி இசையைப் பற்றி சொல்லவா வேண்டும்!, படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறது. அதிலும், 1987 ம் காலக்கட்டத்தில் கதை நடப்பதால், அப்போதைய இளையராஜாவின் பாடல்கள் பின்னணியில் ஒலிப்பது காட்சிகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியன் மற்றும் டோனி சான் கரிசல் காட்டின் வெப்பத்தையும், அம்மண்ணின் மனிதர்களையும் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

 

கரிசல் மண்ணின் காதல் மற்றும் மோதலை மையப்படுத்தி நகரும் கதையில்,  இடம்பெறும் கதாபாத்திரங்களின் நடிப்பு மற்றும் அவர்களுடைய வாழ்வியல் அதை இயல்பாக காட்சிப்படுத்திய விதம் ஆகியவை ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘வட்டார வழக்கு’ வழக்கமான சினிமா பாணியிலான படமாக அல்லாமல் மக்களின் வாழ்வியலை சொல்லும் எதார்த்த படைப்பாக உள்ளது.

 

ரேட்டிங் 3.5/5