Feb 16, 2019 08:44 AM

தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற சகல பிணி தீர்க்கும் சஞ்சீவினி தீர்த்த திருமஞ்சனம்

cb8477b8c1ed09e29d15eec00f7e133c.jpg

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஏகாதசி திதியை முன்னிட்டு இன்று 15.02.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பிணி தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சகல விதமான பிணி தீர்க்கும் அமிர்த சஞ்சீவினி யாகத்திகழும் நெல்லிக்காய் பொடியை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

 

நெல்லிக்காய் பொடி உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும். நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு. மேலும் நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.

 

அனைவரும் சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்கள், சர்க்கரை நோயாளிலிருந்து விடுபடவும், அனைவரும் ஆரோக்யத்துடன் ஐஸ்வர்யம் பெற்று ஆனந்தமாக வாழவும் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெற்ற மஹா தன்வந்திரி ஹோமத்திலுல் நெல்லிபொடி திருமஞ்சனத்திலும் பிரார்த்தனை நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதங்களுடன் நெல்லிப்பொடி தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.