Mar 07, 2019 06:10 PM

தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற அமாவாசை யாகம் மற்றும் வாஸ்து சாந்தி ஹோமம்

1a0341353a539b28462450fa33d5af91.jpg

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 06.03.2019 புதன்கிழமை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் யாகமும், வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி ஹோமமும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

 

அமாவாசை யாகம்

 

குடும்பத்தில் சச்சரவு நீங்கவும், தாம்பத்திய உறவில் விரிசல் அகலவும், நல்ல வேலை கிடைக்கவும், திருஷ்டிகள் நீங்கவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும் அமாவாசை மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது.

 

வாஸ்து சாந்தி ஹோமம்

 

மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மிளகாய் வற்றல் யாகமும், வாஸ்து சாந்தி ஹோமமும், ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதங்களுடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.