Nov 26, 2019 04:51 PM

ஃபெமீனா அங்கீகரித்து கெளரவித்த சூப்பர் டாட்டர் விருதுகள் 2019

8d4664428b54d02f5a77fca4b75111dc.jpg

இந்தியாவில் பெண்களுக்கான மாபெரும் பிராண்ட் ஆகத் திகழும் ஃபெமீனா, வண்ணமயமான விழா ஒன்றை நடத்தி, நான்காவது சூப்பர் டாட்டர் விருதுகளை வழங்கியது. அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து நேச்சுரல், குஷால் பேஷன் ஜ்வல்லரி மற்றும் சுக்ரா ஜ்வல்லரி ஆகியவையும் இந்த விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற சாதனையாளர்களின் பின்னால் முக்கியமான ஒருவர் இருப்பார். இந்த உண்மைக்கு உறுதுணையாக, தென்னிந்தியாவில் சாதனை செய்த சில பெண்களின் பெற்றோரை அங்கீகரித்து கெளரவிக்கும் விதமாக இந்த வண்ணமயமான விழா, சென்னை சர் முத்த வெங்கட சுப்பாராவ் அரங்கில் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது.

 

தனித்துவம் மிக்க பிணைப்பு மூலம், சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்ட புதல்விகள் தங்கள் பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும் தளமாக அமைந்தது இந்த விழா மேடை. பல்வேறு பிரிவுகளில், பின்பற்றத்தக்க தலைவர்களை உருவாக்க, உறுதுணையக இருந்த பெற்றோருக்கு அங்கீகாரமளித்து கெளரவிப்பதே இந்த விழாவின் நோக்கம். பெண்களின் நிஜமான சக்தியையும் அவர்களின் சாதனைகளையும் வெளிப்படுத்த, முன்னணி பிராண்ட் ஆன ஃபெமீனா தீவிரமாக செயலாற்றுகிறது. சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக  ஃபெமீனா பெண்களுக்கு அதிகாரமளித்தல், மதிப்பீடு செய்தல், மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கட்டமைத்து வருகிறது. டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம், உலகெங்கும் பெண்களுக்கு வழிகாட்ட தீவிரமாகப் பணியாற்றும் அறிவுசார் ஆளுமைகளை ஏற்கெனவே ஃபெமீனா பிராண்ட் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் பேஷன் உலகில் சாதனை புரிந்தவர்களின் பெற்றோர்,  இந்த வண்ணமயமான விழாவில் கெளரவிக்கப்பட்டனர். அவர்களின் விவரம் வருமாறு:

 

1. அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியனின் தந்தை திரைப்படம் மற்றும் நாடக நடிகை

2. ராஜா - காயத்ரி ராஜாவின் தந்தை தொலைக்காட்சி நடிகை

3. ராமலிங்கம் - வினோலினி ராமலிங்கம் அயர்ன்மேன் வின்னர்

4. மீனாட்சி சந்தோஷ் - தீயின் தாயர் பாடகி

5. வி.வெங்கட் ராமன் தீபா வெங்கட்டின் தந்தை பின்னணி குரல் கொடுப்பவர்

6. சி.குப்பன் உமாதேவியின் தந்தை எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர்

7. டாக்டர் என்.எஸ்.கே.பத்மினி அனு வரதனின் தாயார் உடையலங்கார நிபுணர்

8. திருமதி.மணிமொழி ஸ்நேகா பார்த்திபராஜாவின் தாயார் வழக்குரைஞர்

9. திருமதி ஜூனைதா பேகம் எம்.இஷா பாத்திமாவின் தாயார் நிறுவனர் ஐயமிட்டு உண் சென்னையின் சமூக குளிர்சாதனப்பெட்டி

10. திருமதி ரத்னா மாணிக்கம் விஜயலட்சுமி தம்மாலாவின் தாயார் தலைமை நிர்வாக அதிகாரி ரைட் ஸ்ட்ரைட் பி.லிட்

11. வி.சி.விஜய ராகவன் டாக்டர் மீரா ராகவனின் தந்தை

12. திருமதி கீதா சேஷாத்ரி டாக்டர் ரேவதி ராஜின் தாயார்

13 திருமதி ரத்னாவதி கோதண்டம் டாக்டர் சுமனா மனோகரின் தாயார்

14. டாக்டர் ராஜசித்ரா மணிவண்ணன் ஐஸ்வர்யா மணிவண்ணனின் தந்தை சிலம்பாட்டம்

15. திருமதி சித்தாரா திம்மையா சாந்தலா டி.மேடப்பா உணவுத் தொழில்

 

Femina Super Daughter Award

 

 

ஃபெமீனா இதழின் ஆசிரியரும் தலைமை சமூக அதிகாரியுமான தன்யா சைதன்யா தனது உரையில் குறிப்பிட்டதாவது, "தங்கள் புதல்வியின் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகித்து, அவர்கள் வெற்றிக்குத் துணை நிற்கும் பெற்றோரை கவனத்தில் கொண்டு மிகச் சரியான முறையில் இந்த சூப்பர் டாட்டர் விருதுகள் வழங்கப்படுகின்றன. பெற்றோரின் தொலைநோக்குப் பார்வை, பங்களிப்பு மற்றும் முயற்சிகள் தான் அவர்கள் குழந்தைகளுக்கு பெயரையும் புகழையும் கொடுத்து அவரவர் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. இன்றைய உலகில் தனித்துவமும் பலம் மிக்கவர்களாகவும் பெண்கள் இருக்கும் நிலையில், தங்கள் குழந்தைகள் சிறகு விரித்துப் பறந்து உச்சம் தொட்டு சாதனை செய்ய பெற்றோர் வானமாக இருக்கிறார்கள். சூப்பர் டாட்டர்ஸ் தங்கள் பெற்றோருக்கு தரும் சிறிய அங்கீகாரம் தான் இந்த விருது. 

 

எப்போதும் பெண்களுக்குத் துணை நிற்கும் ஃபெமீனா, சூப்பர் டாட்டர்ஸை  இந்த உலகுக்கு வழங்கய பெற்றோருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது" என்றார்.