’மை இந்தியா பார்ட்டி’ புதிய அரசியல் கட்சி உதயம்
இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அணில் குமார் ஓஜா, தொழில்துறை மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். புல்லாதேவி அறக்கட்டளையின் அறங்காவலரான அணில் குமார் ஓஜா, இந்த அறக்கட்டளையின் மூலம் மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விச் சேவையில் பல காலம் தொண்டாற்றி வருகிறார்.
தமது தொழிலில் மாற்றத்தை கொண்டுவந்து முன்னேற்றத்தை கண்ட அணில் குமார் ஓஜா, தற்போது அதே முன்னேற்றத்தை தமிழகத்திலும் ஏற்படுத்தி, தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்ல புதிய திட்டங்களுடன் மை இந்தியா பார்ட்டி (எனது இந்தியா கட்சி) எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.
‘போதும்!… போதும்!!… ஏமாந்தது போதும்!!!…’ என்ற கோஷத்தை முன்வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த கட்சியின் கனவுத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் வருமாறு:
அனைவருக்கும் இலவச தண்ணீர்:
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் இணைப்புடன் தூய்மையான குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க வழிவகை செய்யப்படும். அரசாங்கம், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கிராமப்புற முன்னேற்றத்திற்காக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் கொடுக்கிறது, மாறாக அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த நிதியை வைத்து, நதிகளை இணைப்பதுடன், ஏரி, குளங்களை தூர்வாரி புத்துயிர் அளித்திருந்தால் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும், தண்ணீர் பஞ்சமும் தீர்ந்திருக்கும். ஆனால் செய்யவில்லை.
அனைவருக்கும் இலவச மருத்துவம்:
அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படும். ஏழை, பணக்காரர் என வேறுபாடு இன்றி எந்த ஒரு தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை பெறலாம்.
அணைவருக்கும் இலவச கல்வி:
ஏழை, பணக்காரர் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் கல்வி இலவசமாக்கபடுவதுடன், கட்டாயமும் ஆக்கப்படும். மேலும் மாணவர்களின் கல்விக் கடன்கள் அனைத்தும் மை இந்தியா பார்ட்டியின் ஆட்சி காலத்தில் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
தமிழகத்தில் தொழில் தொடங்க தமிழர்களுக்கே முன்னுரிமை:
இப்போது வியாபாரம் என்ற பெயரில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து, நாட்டை கொள்ளையடிக்க வைக்கிறார்கள். மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வரும் பொன்னாளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சட்டம் ஒழுங்கு ( ZERO CRIME STATE ):
மை இந்தியா பார்ட்டி ஆட்சிப் பொறுப்பெற்ற 6 மாதத்திற்குள், சட்டம் ஒழுங்கை சரி செய்து, குற்றமற்ற முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்.
ஊழலை ஒழித்து தமிழகத்தை TAX FREE TAMILNADU ஆக மாற்றிக் காட்டுவோம்:
மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால், ஊழலை வேருடன் அகற்ற வகை செய்யும், கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியப்படுத்தப்படும். தேவையானவர்களுக்கு திட்டத்தின் முழு பலனும் எந்தவித ஊழல் குறுக்கீடுகளும் இல்லாமல் சென்றடையுமாறு நிறைவேற்றப்படும்.
மாநகராட்சி, நீர் மற்றும் கழிவு நீர் வரிகள் முற்றிலுமாக நீக்கப்படும்.
பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்படும்.
மின்கட்டண விலை 20 சதவீதம் குறைக்கப்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 சதவீதம் குறைக்கப்படும்.
விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இயற்க்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு இலவச இயற்க்கை உரங்கள் வழங்கப்படும்.
60 வயதிற்க்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 5000 பென்ஷனாக வழங்கப்படும்.
கேஸ் விலை தற்போதைய விலைக்கு 100 ரூபாய் குறைக்கப்படும்.
மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால் தமிழக நிறுவன முதலீட்டாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்:
6000 கோடி முதலீட்டு செய்த நிசான் நிறுவனத்திற்கு, இந்திய அரசாங்கம் அந்த முதலீட்டு தொகைக்கு சமமான அளவிற்கு மானியம் கொடுத்துள்ளது. இதே மானியம் தமிழக முதலீட்டாளர்களுக்கு அளித்திருந்தால் நம் மக்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கும். மை இந்தியா பார்ட்டி ஆட்சிக்கு வந்தால் தமிழக நிறுவன முதலீட்டாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.