Feb 15, 2022 09:21 AM

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு - சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்

613daa9878e8b201aaef9e529f27e20e.jpg

வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் விழாவும், அமைப்பின் மாநில செயற்குழு கூட்டமும் சென்னையில் நடை பெற்றது.

 

இந்த கூட்டத்திற்கு முனபாக தனது பிறந்த நாளை முன்னிட்டு தென்னமரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. சென்னை சாலிகிராமம் சாய் நகரில் உள்ள சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கபபட்டது. 

 

பின்னர் வன்னியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சமூகநீதிப் போராளி இடஒதுக்கீட்டு நாயகர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னையில் உள்ள வன்னியர் கூட்டமைப்பின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை வரவேற்றும் தீர்மானங்களை விளக்கியும் மாநிலப் பொதுச் செயலாளர் அருண்கென்னடி அவர்கள் பேசினார்.

 

புதுச்சேரி வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்  பூங்காவனக் கவுண்டர் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் M.D.K. சாந்தமூர்த்தி, மாநிலச் செயலாளர் திரு. மனோகரன், செயற்குழு உறுப்பினர் திரு. மோகன், திரு. வெங்கட் அவர்கள் கலந்து கொண்டனர்.

 

அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் துணைத் தலைவர்  ரெ. குமாரப்பா, தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆப்ரகாம் லிங்கன், மாநில ஊடகப்பிரிவு தலைவர்  கு. சாந்தகுமார். கொங்கு மண்டல பொறுப்பாளர்  ராம்குமார், சென்னை மாவட்ட செயலாளர்  சதீஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.

 

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருவன: 

 

1) 10.5% உள்இட ஒதுக்கீட்டின் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை வருகின்ற 15 & 16 அன்று ஏற்கனவே சமர்பித்துள்ள 10.5 சதவீதத்துக்கான உயர்நீதிமன்ற வழக்கில் (WP No 14025 of 2010) பெறப்பட்ட நீதிமன்ற ஆணை, அரசு ஆணை எண் GO MS No. 35, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை ஆணை, நீதிமன்ற இறுதியாணை ஆகியவற்றை விவாதித்து 10.5% தடை உத்தரவை நீக்கி செயல்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

 

2) வன்னியர் பொதுச்சொத்துவாரியத்திலிருந்து வன்னிய சமுதாயத்துக்கு தேவையான பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை செயல்படுத்த வைத்தல்.

 

3) வன்னியர் நலவாரியம் வழக்கு எண் WP No. 20544 of 2012 உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்று நீதிமன்ற ஆணை பெற்று விட்டோம். அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

4) இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 25 தியாகிககள் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட மணிமண்டபம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

 

5) வன்னிய சமுதாய சுதந்திர போராட்ட தியாகிகள் சாமி நாகப்ப படையாட்சி, அர்த்த நாரீசவர வர்மா, அஞ்சலை அம்மாள், எஸ்.௭ஸ். இராமசாமி படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், விருப்பாச்சி கோபாலு நாயக்கர் தலைவர்களை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் புறக்கணிக்காமல் காட்சிபடுத்த தமிழக அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 

6) நடைபெற இருக்கின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி ஆதரவு அளிக்கிறது. அமைப்பு மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சமூகநீதி கூட்டணியான திமுக கூட்டணிக்கு தேர்தலில் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.