கொட்டும் மழையில் ஜூம்பா கொண்டாட்டம்! - ஏரோம்பா ஃபிட்னஸின் விழிப்புணர்வு பிரச்சாரம்
உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு உடற்பயிற்சிகளை மக்கள் செய்து வந்தாலும் அதை ஒரு கஷ்ட்டமான வேலையாக நினைத்தே செய்து வருகிறார்கள். ஆனால், ஜூம்பா உடற்பயிற்சியை மட்டும் பலர் இஷ்ட்டப்பட்டு செய்கிறார்கள். இதற்கு காரணம் நடனத்துடன் கூடிய உடற்பயிற்சியாக ஜூம்பா இருப்பது தான். அதே சமயம், ஜூம்பா உடற்பயிற்சியை நடனக்கலைஞர்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு கருத்து மக்களிடையே பரவலாக காணப்படுகிறது.
ஆனால், இந்த கருத்தை மறுத்திருக்கும் சர்வதேச ஜூம்பா உடற்பயிற்சி நிபுணர் ஷாலு, ஜூம்பா ஃபிட்னஸ் நடனக் கலைஞர்களுக்கு மட்டுமே என்பது வெறும் கட்டுக்கதை, என்று தெரிவித்துள்ளார்.
9 ஆண்டுகளுக்கு மேலாக ஜூம்பா பயிற்சியாளராக அனுபவமுள்ள சான்றளிக்கப்பட்ட உடற்பயிற்சி நிபுணரான ஷாலு, சென்னை அரும்பாக்கத்தில் ’ஏரோம்பா ஃபிட்னஸ்’ (AEROMBA Fitness) மற்றும் ஜூம்பா நடனப்பயிற்சி மையத்தி நடத்தி வருகிறார்.
’ஏரோம்பா ஃபிட்னஸ்’ (AEROMBA Fitness) ஸ்டுடியோ தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்ததை கொண்டாடும் விதமாக ஷாலு, ’ஜூம்பா ரெயின் பார்ட்டி’ (Zumba Rain Party) என்ற தலைப்பில் ஜூம்பா உடற்பயிற்சியின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரம் மூலம் ஒவ்வொருவரிடமும் ஜூம்பா உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க செய்வதை தனது இல்லக்காக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஜூம்பா நடன உடற்பயிற்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வித்தியாசமான ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்ட உடற்பயிற்சி நிபுணர் ஷாலு, செயற்கை மழையை உருவாக்கி அதில் பெண்கள் மற்றும் சிறுவர்களை ஜூம்பா நடனம் ஆட வைத்தார்.
முதல் முறையாக செயற்கை மழையில் நடத்தப்பட்ட இந்த ஜூம்பா நடன பயிற்சி தற்போது சோசியல் மீடியா மற்றும் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ஜூம்பா உடற்பயிற்சி பற்றி மக்களிடம் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உடற்பயிற்சி நிபுணர் ஷாலு கூறுகையில், “உடற்தகுதி குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் அதிகரிப்பதை தனது முதன்மை குறிக்கோளாக கொண்டிருக்கும் ஷாலு, ஜூம்பா ஃபிட்னஸ் நடனக் கலைஞர்களுக்கு மட்டுமே என்பது முற்றிலும் தவறானது. அந்த கட்டுக்கதையை உடைப்பதும் எங்கள் குறிக்கோளில் ஒன்று. குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் ஜூம்பா பயிற்சி செய்வதன் மூலம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.” என்றார்.