கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளை! - அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்
சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை நேற்று (செப்டம்பர் 1) பிரம்மாண்டமாக திறந்துள்ளது. சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். இவருடன் ஏ. ராமதாஸ் ராவ் (சென்னை ஹோட்டல் சங்கத்தின் கௌரவத் தலைவர்), ஏ.எம். விக்ரம ராஜா (தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர்), டாக்டர்.எழிலன் எம்.எல்.ஏ, ஏ.எம்.வி பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., கருணாநிதி எம்.எல்.ஏ., சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
2019ஆம் ஆண்டில் இதன் முதல் கிளை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டதில் இருந்து பார்பிக்யூ பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்து வருகிறது. செயற்கை உணவூட்டிகளோ நிறமூட்டிகளோ எதுவும் இல்லாமல் இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட பொருட்களையே கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ பயன்படுத்துகிறது. இதன் தரம், அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்கள் சேவை போன்றவையே கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் வெற்றி ரகசியம். இதன் முதல் கிளையை போலவே மேம்படுத்தப்பட்ட டைனிங் அனுபவத்தை தி.நகர் கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ வாடிக்கையாளர்களுக்குத் தர இருக்கிறது.
இந்த புதிய கிளையில் உள்ள பஃபேயில் சூப், ஸ்டார்டர், சாலட், கபாப், இனிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் கிடைக்கும். இதன் மெனு வாரந்தோறும் மாறும். கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவை அபிஷேக் என் முரளி, அக்ஷயா முரளி, சாய் காஷ்யப் மற்றும் மறைந்த டாக்டர்-செஃப் சௌந்தரராஜன் ஆகியோர் இந்த உணவகத்தின் மெனு, அதன் சுவை மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆகவே, வாடிக்கையாளர்களுக்கு இதன் இரண்டாவது கிளை திறப்பு என்பது கொண்டாட்டம் ஆகும்.