ஆதரவற்ற குழந்தைகளுக்கு விமான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்த தொண்டு நிறுவனங்கள்
கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, மெட்ராஸ் ஏங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் கோயம்புத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11 தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சி மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா, லேடீஸ் சர்க்கிள் இந்தியா இணைந்து, 15 ஆதரவற்ற குழந்தைகளின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும் விதமாக "ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி" நிகழ்வின் மூலம் கோவையில் இருந்து சென்னை வரை விமான பயணத்தை ஏற்பாடு செய்தது
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக டிஆர்.மோரியா பிலிப்- தேசிய தலைவர் ரவுண்ட் டேபிள் இந்தியா, கௌரவ விருந்தினர் சிஆர்.மன்பிரீத் பாசின்- பகுதி தலைவர் பகுதி2 லேடீஸ் சர்க்கிள் இந்தியா, திரு.சந்தோஷ் ராஜ் பகுதி தலைவர் பகுதி2 ரவுண்ட் டேபிள் இந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி என்ற நிகழ்வின் கீழ், சரணாலயம் என்ற அனாதை இல்லத்தைச் சேர்ந்த 15 குழந்தைகளுக்கு, கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு சுற்றுப் பயணத்தில் முதல்முறையாக விமானத்தில் பறந்த அனுபவம் ஏற்படுத்தித் தரப்பட்டது.
கோயம்புத்தூரில் இருந்து விமானத்தில் இருந்து சென்னைக்கு தரையிறங்கியதும், விமான நிலையத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும்15 ஆதரவற்ற குழந்தைகளுக்கு வேடிக்கை நிறைந்த உலகைக் காட்டும் விதமாக சென்னை விஆர் க்குச் சென்றனர்.
சென்னை விஆர் நிர்வாகம் வசந்த பவனில் குழந்தைகளுக்கு உணவினை ஏற்பாடு செய்தது. ஆடம்பரமான உணவுக்குப் பிறகு, குழந்தைகள் தங்கள் மனதைக் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும் வகையில் VR ல் ஒரு பிரத்யேக இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் குழந்தைகள் அனைவரையும் மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அனைவரும் உற்சாகமடைந்தனர்.
அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசியத் தலைவர் மோரியா பிலிப் கூறுகையில், "ஆர்டிஐ ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை வளமாக்குவதற்காண கருவியாக உள்ளது மற்றும் ஃப்ளைட் ஆஃப் ஃபேண்டஸி என்பது இந்தியா முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளில் ஒன்றாகும். இந்த முறை, CNRT 20, MART 100 மற்றும் CNLC 11 ஆகியவை இந்த 15 குழந்தைகளுக்கு கனவுகளை நிஜமாக்க முன் வந்துள்ளன. அதேபோல் இந்த உன்னத முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்த VR நிர்வாகத்திற்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.