நியூஸ் டிவி-யில் ‘வியப்பூட்டும் விஞ்ஞானம்’
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணிக்கு அறிவியல் தகவல்கள் அடங்கிய ”வியப்பூட்டும் விஞ்ஞானம்” என்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.
30 நிமிடங்கள் அடங்கிய இந்த நிகழ்ச்சியில் சமீபத்திய அறிவியல் நிகழ்வுகள், காலப்பயணம், வேற்று கிரகவாசிகள் என்று பலரும் அறிந்திடாத பல புதிய தகவல்களோடு அறிவியல் செய்திகள் அடங்கிய தொகுப்புகள் அழகான காட்சிகளோடு தொகுத்து வழங்கப்படுகின்றன. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் ஹரீஷ் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியை. லலிதா தொகுத்து வழங்குகிறார்,
மேலும் வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சியில் வாரம் ஒரு விஞ்ஞானி எனும் பகுதியில் வாம் அறிந்திராத பல விஞ்ஞானிகளையும் அவர்களது வாழ்க்கை வரலாறு, எப்படி கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர் என்பனவற்றை பற்றி அறிந்துகொள்ளலாம். சயின்ஸ் புல்லடின் பகுதியில் பவ்வேறு அறிவியல் நிகழ்வுகளை அதிவேகமாக தெரிந்துகொள்ளலாம்.
இந்நிகழ்ச்சி குறித்து தயாரிப்பாளர் ஹரிஷிடம் கேட்டபோது, நாம் தரும் அறிவியல் தகவல்கள் சிறுவர்கள் மத்தியில் அறிவியல் குறித்த ஆர்வத்தை தூண்டவேண்டும். பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பதாக விமர்சனங்கள் வருகிறது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியினை தயாரிப்பதில் பெருமையாக உள்ளதாகவும் கூறுகிறார்.