சிவனை வெல்வதில் தீவிரம் காட்டும் சங்கச்சூரன்! - ‘சிவசக்தி திருவிளையாடல்’ தொடரின் சுவாரஸ்யம்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ‘சிவசக்தி திருவிளையாடல்’.
அனைவரின் அமோக ஆதரவுடன் வெற்றித் தொடராக ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி ஆன்மிகப் புராண தொடரான இதில் இந்த வாரம் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற இருக்கிறது.
அதில், புதிய அரசனாகப் பதவியேற்றுக்கொண்ட சங்கச்சூரன், சிவனை எதிர்த்து வெல்லும் தன் நோக்கத்தைத் தீவிரமாக்குகிறான். அவனை, சிவனாலும்கூட வெல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அவன் மனைவி துளசி மேற்கொள்ளும் பதிவிரதாதர்மம். அதனை மீறி மும்மூர்த்திகளாலும் சங்கச்சூரனை வதம்செய்ய இயலாது. ஆனால், மகாதேவரான சிவன், சங்கச்சூரனை வதம் செய்கிறார்… எப்படி? நாராயணர் செய்யும் ஒரு தவறால் ஒரு புதிய வழிபாட்டு முறைய அறிமுகப்படுத்துகிறார் சிவன். அதில் சிவனுக்கான தண்டனையும் இருக்கிறது… அது என்ன? சிவன் கோயிலில் துளசி வழிபாடு இல்லாமல் போனது ஏன்?
தனது துளசிதேவியின் பதிவிரதாதர்மத்தால் யாராலும் வதம்செய்யமுடியாத அசுர அரசனாகஉருவெடுக்கிறான் சங்கச்சூரன். அவன் தாரகாசுரனைப் போலவே தேவர்களை எதிர்க்காமல் சமரசம் கடைபிடித்தவன். ஆனாலு, தனது தந்தையை, தனது அசுரகுல திரிபுரா அரசுரர்களை பாசுபத அஸ்திரத்தால் சிவன் வதம் செய்து கொன்றதால் சிவன் மீது மாறா சினமும் பகையும் கொள்கிறான் சங்கச்சூரன். அசுர மாதாவும் அசுர குட்ருவும் எவ்வளவு தடுத்தும் சிவனைச் சண்டைக்கு அழைத்து வெல்ல முயல்கிறான். தன் முயற்சியில் சற்று வெல்லவும் செய்கிறான். காரணம், அவனது மனைவி துளசியின் பதிவிரதா தர்மம் அவனைக் கவசமாகக் காக்கிறது. இது ஊழியூழிக் காலமாக துவந்த யுத்தமாக மாறிவிடக் கூடாது என நினைக்கும் நாராயணர், துளசியின் பதிவிரதா தர்மத்தைக் கலைக்க, சங்கச்சூரனாக உருமாறி, அவளது பதிவிரதா தர்மத்துக்கு பங்கம் விளைக்கிறார். பதிவிரதா தர்மம் பங்கமானதும், சிவனால், சங்கச்சூரன் வதம் செய்யப்படுகிறான். நாராணயரின் ஆள்மாறாட்ட த்தை அறியும் துளசி, வேதனைப்படுகிறாள். தனது இறந்த கணவன் சங்கசூரன் உடலை மடியில் அள்ளிப்போட்டுக்கொண்டு சிவனிடம் நியாயம் கேட்கிறாள் துளசி. நாராயணர் செய்த தவறுக்கு துளசியையே அவருக்குத் தண்டனை தரச் சொல்கிறார் சிவன். துளசியும் நாராயணரைக் கல்லாக சபிக்கிறாள். ஜெகத்ரட்சஜன் நாராயணர் கல்லாக சமைந்த தால் பிரபஞ்ச இயக்கம் தடுமாறுகிறது. நாராயணருக்கு சாபவிமோச்சனம் தரச் சொல்லி துளசியிடம் சிவன் கேட்டுக்கொள்ள, அசுரமாதா திதி தடுக்கிறாள். இறுதியில் நாராயணர் சாப விமோச்சனம் அடைந்தாரா? துளசிக்கான நியாயத்துக்கும் கண்டஹி ஆறுக்கும், சாலக்கிராமக் கல்லுக்கும் ஓர் இணைப்பை உருவாக்கி, ஒரு வழிபாட்டைச் சிவன் உருவாக்க அதன் துளசி ஏற்றாளா? சிவன் கோயிலில் துளசி வழிபாடு இல்லாமல் போனதற்கும் பதிவிரதா தர்மம் குலைந்த தற்கும் என்ன தொடர்பு? நெஞ்சுருக வைக்கும் ஆன்மிகப் பக்திக் கதையோடு விறுவிறுப்பாக நகரும் இந்த வாரம் சிவசக்தி திருவிளையாடல் தொடர்.