அறிவோம் ஆரோக்கியம்

புதுயுகம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரையிலும் மதியம் 12:00 மணி முதல் வரையிலும் மறுஒளிபரப்பாக மறுநாள் காலை 8:30 மணி வரை வரையிலும் இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
30 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் இதொடரின் முதல் 15 நிமிடங்கள் ’மூலிகை மகத்துவம்’ பகுதியும், அடுத்த 15 நிமிடங்கள் ’ஆர்கானிக் அறுசுவை’ நிகழ்ச்சி என அறிவோம் ஆரோக்கியம் நிகழ்ச்சியானது நேயர்களுக்கு பயனுள்ள வகையிலான மிகச்சிறந்த ஒரு ’காம்போ பேக்’ (cambo pack)
உலகம் உன்னதமானது. இங்கு அனைத்து உயிர்களும் உயிர்வாழ்வதற்கு இயற்கை எல்லாவிதமான வளங்களையும் வளமாக தந்திருக்கிறது. உயிர்நீடிக்க உணவு எந்த அளவிற்கு முக்கியமோ … அதைவிட உயிரைத் தாங்கி நிற்கும் உடலுக்கு உயறுதி அவசியம். உடல் உறுதியோடு விளங்க ஆரோக்கியம் அவசியம்.
இந்த ஆரோக்கியமானது “வரும் நோய்களைப்போக்குவது, நம்மை நோய்கள் அணுகாவண்ணம் காப்பது” என இருபிரிவுகளை உள்ளடக்கியதாகும். மூலிகை மூலம் நோய்களைப் போக்கியும், உட்கொள்ளும் நச்சுத்தன்மை இல்லாத உணவுகளின் மூலம் அந்த நோய்களை அண்டவிடாமல் செய்தும் நம்மைக் காத்துக் கொள்ளமுடியும்.
உலகில் மனிதகுல வரலாற்றில், நமது நாட்டின் தொன்மையான வரலாற்றில் உணவின் அவசியத்தையும், அதை எடுத்துக்கொள்ளும் உடம்பின் ஆரோக்கியத்தின் நன்கு அறிந்திருந்தனர். அதனால் அன்றாட வாழ்வில் தங்களது ஆரோக்கியத்தை நன்கு பராமரித்து வந்தனர். உடல் , உயிர், ஆன்மா ஆகிய மூன்றையும் சமநிலையில் இயற்கையென்னும் இறைவன் மேல் வத்தனர். அதையும் மீறி உடலானது சிற்சில நோய்களால் உடல் அவதியுறும்போது உடல்நிலையின் முக்கிய கூறுகளான வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, நோய்களை வகைப்படுத்தி, அதன் தீவீரத்திற்கேற்ப எளிய வகை மருந்துகளை உட்கொண்டனர். நோயினைப் போக்கினர். நீடித்தும் வாழ்ந்தனர். இதற்காக இயற்கை தந்துள்ள அற்புதங்களும் அதிசயங்களும் மிகுந்த மூலிகை வகைகளையே முழுமையாகவும் தக்க வழிகாட்டுதலுடன் மருந்தாகவும் உட்கொண்டனர்.
இத்தகைய சிறப்புகளையும் தெய்வீகத்தன்மையும் வாய்ந்த மூலிகைகளை வரிசைபடுத்தி, அவற்றின் பெருமைகளை அறிமுகப்படுத்தி, அவற்றை மருந்தாக மாற்றும் விதத்தைத் தெளிவுபடுத்தி, அம்மருந்துகள் குணப்படுத்தும் நோய்களையும் பட்டியலிடுவதே ”மூலிகை மகத்துவம்” என்னும் இந்நிகழ்ச்சிப் பகுதியின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்: கனிமொழி
வைத்தியர்: திரு. ராஜசேகர வைத்தியர்.