ஜெயலலிதாவின் மரணப் போராட்டம்! - மறைக்கப்பட்ட ரகசியங்களுடன் வரும் ‘ஆபரேஷன் ஜெ.ஜெ’
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது தமிழகத்தையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு. உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாஅங்கே 75 நாட்கள்நடத்திய மரணப்போராட்டம் பதை பதைப்பின் உச்சம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது?அவருடைய உடலுக்கு என்ன பிரச்னை? என்ன மாதிரியான உயர்தர சிகிச்சைகள்தரப்பட்டன? அப்படிப்பட்ட சிகிச்சைகள் ஏன் ஜெயலலிதாவை உயிரோடு மீட்கத்தவறின? என்பன போன்ற கேள்விகள் ஜெயலலிதாவின் மரணத்தைச்சுற்றி சுழல்கின்றன.
இவற்றில் சில கேள்விகளுக்குப் பகுதி அளவிலான பதில்கள் வருகின்றன. பல பதில்கள் புதிய புதிய கேள்விகளை எழுப்புகின்றன. சில பதில்கள் உண்மை என்று நாம் நம்பக்கூடிய பல செய்திகளின் மீது சந்தேகத்தை பாய்ச்சுகின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடும் முகமாகவே ஓய்வு பெற்ற நீதிபதிஆறுமுகசாமி தலைமையில் விசாரணைகமிஷன் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை குறித்த செய்திகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி புதிய முயற்சியைத்தொடங்கியது. அதன்பெயர், ஆபரேஷன் ஜெ.ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது ஒரே நாளில் நடந்த நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அந்த மரணத்துக்குக்காரணமான நோய்கள் ஒரே இரவில் உருவானவையல்ல என்பது உறுதி. எனில், எப்போது முதல் ஜெயலலிதாவின் உடலை நோய்கள் பாதிக்கத்தொடங்கின? அந்த நோய்களுக்கு என்னகாரணம்?
அன்றாடப்பணிகள் மட்டும்தான் ஜெயலலிதாவை உருக்குலைத்தனவாஅல்லது அதைத்தாண்டிய அரசியல் காரணங்களும் உள்ளனவா? ஜெயலலிதாவின் மரணப் போராட்டம் போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் தொடங்கியதாஅல்லது பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஆரம்பித்ததா?
இன்னும் இன்னும் பலகேள்விகள் விடையற்றுக்கிடக்கின்றன. அப்படியான சில கேள்விகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, விடைதேட முயற்சித்திருக்கிறது.நியூஸ்18 தமிழ்நாடு. இப்படிப்பட்ட முயற்சியை எந்த வொரு தமிழ் தொலைக்காட்சியும் செய்திடாத நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் பதிவானஆவணங்கள், வாக்குமூலங்கள் ஆகியவற்றின் துணையோடும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களின் உதவியோடும்“ஆபரேஷன் ஜெ.ஜெ” என்றநிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடுதொலைக்காட்சி.”
இந்நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் ஜூலை 20ஆம் தேதி மற்றும் ஜூலை 27 2019 ஆகிய தேதிகளில் இரவு 7:00 மணிமுதல் 8:00மணி வரை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.