Oct 19, 2022 05:41 AM
ரசிகர்களின் வீடு தேடிச்சென்று தங்கம் கொடுத்த கலைஞர் தொலைக்காட்சி!

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு 'பொன்னி C/O ராணி' நெடுந்தொடரும், இரவு 8.30 மணிக்கு 'கண்ணெதிரே தோன்றினாள்' நெடுந்தொடரரும் ஒளிபரப்பாகி வருகிறது.
குடும்பங்களிடையே வரவேற்பை பெற்று வரும் இந்த நெடுந்தொடர்களுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் மெகா பரிசுப்போட்டி நடத்தப்பட்டது.
இதில், கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக விடை அனுப்பி பரிசு வென்ற நேயர்களுக்கு, கலைஞர் தொலைக்காட்சியின் ‘தேடி வரும் தங்கம்’ வாகனம் மூலம் நேயர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பரிசுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தனர்.