May 15, 2024 01:34 PM

விறுவிறுப்பான சம்பவங்கள் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பயணிக்கும் ‘மல்லி’ தொடர்

35cd6df0d800d833bfb5a6ca2597f707.jpg

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’மல்லி’ தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு குழந்தைக்கும், தந்தைக்கும் இடையே உள்ள பாசப்போராட்டத்தில் கதாநாயகி எப்படி இணைகிறாள், என்பதை கதையாக கொண்ட இத்தொடர் பெண்களின் பேராதரவுடன் சுவாரஸ்யமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

 

பெருமாள்புரம் என்ற கிராமத்தில் பால்வாடி டீச்சராக பணியாற்றி வரும் மல்லி, அங்கு நடக்கும் அநீதிகளை தட்டுக்கேட்க, அதன் மூலம் அவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு வரும் சூழல் ஏற்படுகிறது. அதன்படி மல்லி சென்னைக்கு வருகிறார். சென்னையில் தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் குழந்தை வெண்பா, தனது தந்தையிடம் தனக்கு அம்மா வேண்டும், எனக் கேட்டுப் போராடுகிறாள். ஆனால், இரண்டாவது திருமணத்தில் உடன்பாடு இல்லாத விஜய், குழந்தையை சமாளிக்க என்ன செய்கிறார்?, அந்த குழந்தைக்கு தாயாக மல்லி எப்படி மாறுகிறார்? என்பதை விறுவிறுப்பான சம்பவ்னக்கள் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் சொல்கிறது ‘மல்லி’.

 

மிகுந்த பொருட்செலவில் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் பி.ஆர்.விஜயலட்சுமி தயாரிக்கிறார். விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்கியராஜ், மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதிமோகன், ஐசக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருகிறார்கள்.

 

மாரிமுத்து திரைக்கதை எழுதியுள்ள இத்தொடருக்கு மருது சங்கர் வசனம் எழுதியுள்ளார். தரன் இசையமைக்க, அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். மணிபாரதி இயக்குகிறார். நீடா. கே.சண்முகம் படைப்பாக்கம் செய்ய, படைப்பாக்கத்தலைமையாளராக பிரின்ஸ் இம்மானுவேல் பணியாற்றுகிறார்.