Oct 19, 2022 05:47 AM
கலைஞர் டிவி-யில் சுந்தர்.சி, ஜெய் நடிக்கும் ’பட்டாம்பூச்சி’
பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி, ஜெய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த புத்தம் புதிய திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’ தீப ஒளித்திருநாளை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, சுந்தர்.சி-ஐ வைத்து ’வீராப்பு’, ’ஐந்தாம்படை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி இயக்கத்தில், சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் ’பட்டாம்பூச்சி’.
சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெய் சைக்கோ கொலையாளியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். மேலும், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் தீப ஒளித்திருநாளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 23ஆம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
RELATED NEWS
சிவனை வெல்வதில் தீவிரம் காட்டும் சங்கச்சூரன்! - ‘சிவசக்தி திருவிளையாடல்’ தொடரின் சுவாரஸ்யம்
Dec 10, 2024 09:40 AM
அபிமன்யுவின் விண்வெளி சாகசங்களை குழந்தகளுக்கு அறிமுகப்படுத்திய நிக் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா!
Jul 26, 2024 03:22 PM
விறுவிறுப்பான சம்பவங்கள் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பயணிக்கும் ‘மல்லி’ தொடர்
May 15, 2024 01:34 PM