ஒளிபரப்பை நிறுத்தப் போகும் முன்னணி டிவி சேனல்!
தியேட்டருக்கு மக்கள் வருவது குறைந்ததற்கு காரணம் டிவி சேனல்கள் தான். அதிலும் பெண்கள் குறிப்பாக தியேட்டருக்கு வராமல் இருப்பதற்கு டிவி சேனலும், அதில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் தான். தற்போது சினிமாவுக்கு நிகராக் சீரியல்களையும் தயாரிக்க தொடங்கிவிட்டதோடு, இளசுகளை கவரும் வகையில் பல சேனல்கள் சீரியல்களை தயாரிக்கின்றன.
இப்படி மக்களின் வாழ்க்கையில் ஒன்றாக கலந்துவிட்ட டிவி சேனல்களுக்கு இடையில் தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியை சமாளிக்க, புது புது யுக்தியை கையாளும் சேனல் நிர்வாகம், பல புதிய நடிகர், நடிகைகளுடன், புதிய சீரியல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
சேனல்களுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டியில் முன்னணி தொலைக்காட்சியை ஓரம் கட்டிவிட்டு, சில சீரியல்கள் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குறிப்பிட்ட இரண்டு சீரியல்கள் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன்னாக இருக்கிறது. இதன் மூலம் மற்ற நிகழ்ச்சிகளின் டிஆர்பி ரேட்டிங்கையும் உயர்த்த அந்த சேனல் கடுமையாக போராடி வருகிறது.
இப்படி போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த ஜீ தமிழ், திடீரென்று ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஆனால், இந்த நிறுத்தம் சில மணி நேரங்கள் மட்டுமே.
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், என்பதை வலியுறுத்துவதற்காக காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பு கிடையாது, என்று ஜீ தமிழ் அறிவித்துள்ளது.