புதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்

நடிகர் அருன் விஜய் தனது சினிமா பயணத்தையும், செக்க சிவந்த வானம் படத்தின் அனுபவத்தையும் நம்மிடம்பகிர்ந்துகொள்ளும் ’’அன்றும் இன்றும் அருன் விஜய்’’ நிகழ்ச்சி நமது புதுயுகம் தொலைக்காட்சியில் விஜயதசமி நன்னாள்அன்று காலை 11.00 மணிக்குக் காணத்தவறாதீர்கள்…. (19-10-18)
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கி வரும் முண்டாசுப்பட்டி புகழ் முனிஸ்காந்த அவர்கள் தனது சினிமா பயணம் மற்றும் பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்ளும் சிறப்பு மார்னிங் கஃபே காலை 8.00 மணிக்கு காணத்தவறாதீர்கள்…. (19-10-18)
இந்திய துணைகண்டத்தின் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது தசரா. கொல்கத்தா முதல் தூத்துக்குடி மாவட்டம் குலசேரகன்பட்டினம் வரை தசரா விழா கொண்டாடப்படுவதற்கான காரணங்களையும் வரலாற்றையும் அறிவோம்..தசரா விழாவினைப் பற்றிய முழுமையான நிகழ்ச்சி ‘தசரா... கொல்கத்தா முதல் குலசேகரம் வரை, விஜயதசமி அன்று காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .(19-10-18)
உங்களை சுற்றி வாழ்கின்ற இறைவிகளை சந்திக்கிறோம். சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் ஆயுதங்களாக இருக்கும் பெண் தொழிலாளர்களை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ‘இறைவிகள்’.மதியம் 12.30 மணிக்கு (18-10-18)அன்று ஒளிபரப்பாகிறது.