புதிய தலைமுறையின் ‘ரெளத்திரம் பழகு’
ஒரு காலத்தில் சுற்றுலாத்தலமாக விளங்கிய எண்ணூர் இன்று மக்கள் வாழத் தகுதி இல்லாத சாம்பல்பூமியாக மாறிவருகிறது. எதனால் இப்படியானது? இதற்கு யார் காரணம்? இங்கு வாழும் மக்களின் ஆரோக்கியம், கல்வி மற்றும் தொழில்களின் நிலை என்ன? இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்? இத்தனை கேள்விகளுக்கும் அதற்கு மேலும் விடை தருகிறது இவ்வார ரௌத்திரம் பழகு!
பாடகரும், சமூக ஆர்வலருமான திரு.டி.என்.கிருஷ்ணா மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர் திரு. நித்யானந்தன் ஜெயராமன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
கழிமுகம், பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை உள்ளிட்ட ஆறுகள் சாம்பல் கழிவுகளாக மாறிவிட்டதையும், இது இப்படியே தொடர்ந்தால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் எவ்வகையில் பாதிக்கப்படும் என்பதையும் அதனால் ஏற்படக்கூடிய பாதகங்களையும் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்கிறார்கள்.
கார்மல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8:00 மணிக்கு, உங்கள் புதியதலைமுறையில் ஒளிபரப்பாகிறது.