வானவில் டிவி-யின் ’ஓம் நமோ நாராயணா’
வானவில் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9 :00மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் தொடர் 'ஓம் நமோ நாராயணா’.
இதில் தேவபூதிக்கு மகனாக நாராயணனின் அவதாரமாக கபிலன் பிறந்து பெரியவனாகி மக்களுக்கு ஞானத்தை பற்றியும் நாட்டின் நலனை பற்றியும் அனைவருக்கும் எடுத்து சொல்கிறார். மக்களுக்கு அனைவரும் அவர் பேச்சை கேட்கின்றனர். கபிலர் முனிவரை பற்றி கேள்விபட்டு பல முனிவர்கள் வந்து அவரை பாராட்டுகின்றனர். இதில் ஒரு முனிவர் நாராயணரால் அனுப்பியவர் அவர் தான் தேவபூதியின் மகள் அனுஷ்யாவை திருமணம் செய்ய வந்தவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. இருந்தாலும் ஆண்டவன் கட்டளையை ஏற்று வந்துள்ளார் .இந்த செய்தியை கேள்விபட்டு அனைவரும் சந்தோஷப்பட்டு மகள் அனுஷ்யாவிடம் சொல்ல அவள் தனக்கு திருமணம் வேண்டாம். எனக்கு வம் ஒன்றே போதும் என்று பிடிவாதமாக இருக்கிறாள் .பிறகு அனைவரும் அவளை சமாதனம் படுத்தி இந்த திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைக்கின்றனர். திருமணம் நல்லபடியாக முடிகின்றது.
இந்த நிலையில் தேவபூதியின் கணவர் குடும்பத்தை விட்டு தவம் செய்ய போவதாக கூற தேவபூதி சம்மதிக்கவில்லை. கபிலர் தன் தாயிடம் தந்தை போகும் காரணத்தை பற்றி கூறுகிறாள். தந்தை குடும்பத்தை விட்டு போகிறார். இவரை தொடர்ந்து மகன் கபிலரும் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய திரும்பிவிடுகிறார் .
கடைசியாக தேவபூதியும் அவள் மகள் அனுஷ்யாவும் கடுமையான தவம் இருக்க, நாராயணன் அவர்களை ஆசிர்வாதம் செய்தாரா, போன தந்தையும் மகனும் என்ன ஆனார்கள்? இப்படி விறுவிறுப்பாக செல்கிறது.