வேந்தர் டிவி-ன் பின்கோடு
பின்கோடு நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிரபலமான பகுதிகளின் அஞ்சல் குறியீட்டு எண் அடிப்படையில், அனைத்து பகுதிகளின் பிரசித்திப்பெற்ற உணவுவகைகள்,கலை, கலாச்சாரம் மற்றும் அந்தந்த பகுதிகளுக்கான வரலாறு ஆகியவற்றின் எண்ணற்ற தகவல்களை ஆராய்ந்து தொகுத்து வழங்கப்படுகிறது. நாம் வாழும் பகுதிகளில் நமக்கு தெரிந்ததும், தெரியாததுமான பல விஷயங்களை மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் முதல்பகுதியில் அந்த பகுதியின் ஊர் பெயர்க்கான காரணம், அந்த பகுதி உருவான வரலாறு உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெறுகின்றது. நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் அந்த பகுதியின் வரலாற்று பழைமை வாய்ந்த கட்டிடங்கள்,புகழ்பெற்ற வழிபாட்டுதலங்களுக்கான வரலாற்று குறிப்புகளோடு வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் அந்த பின்கோடு பகுதியில் கிடைக்கும் பிரபலமான உணவுகள்,சாலையோர பிரசித்தியான உணவுவகைகள் முதலியவற்றை அந்த ஏரியாவின் மண்மனம் குறையாமல் இடம்பெறுகிறது. இந்த வாரம் பின்கோடில் தஞ்சை மாவட்டத்தின் கோயில்கள் ,சிறப்பு அம்சங்கள், உணவுவகைகள் மற்றும் அதன் அருமை ,பெருமைகளை விளக்குகிறது. வேந்தர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை பாண்டியன் தொகுத்து வழங்குகிறார்.