புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ’நம்மால் முடியும்’ நிகழ்ச்சியின் மூலம் பல தன்னார்வலர்கள் அமைப்புகளை ஒன்றிணைத்து நூற்றுக்கும் மேற்பட்ட சமூகப் பணிகளை ’நம்மால் முடியும்’ என்ற நிகழ்வு மூலம் செய்யப்பட்டு வருகிறது.
அப்பணிகளில் ஒன்றாக விருதுநகர் மாவட்டம் தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர் ஒருவரின் உதவியுடன் ஸ்மார்ட் போர்டும், அதைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. அப்பணி நடந்து கொண்டிருக்கும்போதே மாணவிகளுக்காக கழிப்பறை கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
Our village Our responsibility என்ற கோஷத்துடன் நடைபெற்ற இந்த பணியைப் பற்றிக் கேள்விப்பட்ட இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமார் தன்னார்வலர்களுடன் தன்னையும் அப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொண்டார். நம்மால் முடியும் குழுவின் செயல்பாடுகளில் கலந்து கொள்ள இவர்களைப் போன்ற பிரபலங்கள் முன் வருவது தன்னார்வலர்களுக்கும் கிராம மக்களுக்கும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.