நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகும் செய்திகளுக்கிடையே, ’நில், கவனி, அரசியல்’, நில், கவனி, சினிமா’, ’நில், கவனி, கல்வி’, ’நில், கவனி, அறிவியல்’என்ற தலைப்பில் அரசியல், சினிமா, கல்வி, அறிவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் பேட்டி ஒளிபரப்பாகிறது.
அன்றாட நிகழ்வுகள் சார்ந்த பிரபலங்களின் கருத்துகள் அல்லது சர்ச்சைகள் குறித்த அவர்களுடைய பேட்டிகள் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன.
ஐந்து நிமிடத்திற்கு உட்பட்ட விறுவிறுப்பான முறையில் வீசப்படும் கேள்விக்கணைகளை எதிர்கொண்டு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வாயிலாக பிரபலங்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் பிரத்யேக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை, உமா கதிர் மற்றும் கார்த்திகேயன் தயாரித்து வழங்குகின்றனர்.