தொலைக்காட்சிகளில் எது மக்களிடம் பிரபலமாக உள்ளது மற்றும் எந்த தொலைக்காட்சி தொடரை அதிகமான மக்கள் பார்க்கிறார்கள் என்பதை அறிய டி.ஆர்.பி ரேட்டிங் என்ற முறை உள்ளது. இந்த டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவினாலும், இதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான். அதுமட்டும் இல்ல, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் என்றுமே டாப்பாக இருந்து வந்தது.
மற்ற தொலைக்காட்சிகள் என்ன தான் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும், சன்னுக்கு இருந்து மவுசு குறையாமல் இருந்த நிலையில், தற்போது அந்த நிலைமையை வேறு ஒரு தொலைக்காட்சி மாற்றியிருக்கிறது.
ஆம், டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் முறையாக சன் தொலைக்காட்சியை பின்னுக்கு தள்ளி ஜீ தமிழ் தொலைக்காட்சி முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதுவும் சீரியலில்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. செம்பருத்தி ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
டி.ஆர்.பி ரேட்டிங்கில் நடந்திருக்கும் இத்தகைய மாற்றம் தொலைக்காட்சி உலகிலும், சீரியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.