Latest News :

கனவு வீட்டின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் ‘வீடு’

cc2dc9ab5764bfd990789fc32e6a8bfc.jpg

எல்லோருக்கும் வீடு என்பது மனிதில் தேங்கிக்கிடக்கும் பெருங்கனவு என்பது உண்மை..ஆனால் கண்ட கனவின் படி வீடுகள் அமைந்துவிடுவதில்லை. ஆனால் அவர்கள் காணும் கனவு இல்லங்களை பிரதிபலிக்கும்படியாக பலவீடுகள் இருப்பதை காணமுடியும். வீடு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் என்ன வித்தியாசம் என்று கூறும் அளவுக்கு அவர்களுக்கு கட்டுமானத் தொழில் நுட்பம் தெரிவதில்லை. அப்படிப்பட்டவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் புதியதலைமுறையில் வரும் வீடு நிகழ்ச்சி அமைகிறது.

 

குறைந்தசெலவில் பழைய பொருள்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகள், பசுமை வீடுகள், கல், மற்றும் மண் வீடுகள் என்று பல பகுதிகளுக்குச் சென்று புதிய புதிய வீடுகளை படமாக்கித்தரும் இந்தநிகழ்ச்சி பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கும் ஞாயிறு காலை 10:30 மணிக்கும் புதியதலைமுறையில் ஒளிபரப்பாகிறது. 

 

இந்நிகழ்ச்சியை விஷ்ணு பரத் தொகுத்து வழங்குகிறார்.

Recent Gallery