வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி "காமெடி சூப்பர் ஸ்டார்" ஞாயிறு தோறும் காலை 11:00மணிக்கு ஒளிபரப்பாகிறது .தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பல்வேறு திறமை மிக்க கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் முக்கியமாக குழுக்களாக செயல்படும் திறமையாளர்கள் (Group performance ) இருவர் நகைச்சுவை (Dual performance ) தனி நபர் நகைச்சுவை (stand up comedy) ஆகியவை இடம் பெறுகிறது.
இந்த போட்டியில் திறமைக்கேற்ப மதிப்பெண்கள் வழங்கி ,டைட்டில் வின்னருக்கு பரிசு வழங்கப்படவுள்ளது .ஆண் பெண் இரு பாலரும் பங்குபெறும் இப்போட்டியில் பல்வேறு வகையான போட்டி சுற்றுகள் இடம் பெறுகிறது ..போட்டியாளர்களை சென்னை ,திருச்சி ,மதுரை ,கோவை ஆகிய ஊர்களில் நேர்காணல் நடைப்பெற்று நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .இந்நிகழ்ச்சிக்கு வெங்கடேஷ் ,கிறிஸ்டபர் மற்றும் சரவெடி சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல் படுகின்றனர் .இந்நிகழ்ச்சியை வேந்தர் தொலைக்காட்சி சார்பில் தயாரித்து, இயக்குபவர் சகாதேவன்.