புதுயுகம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘லைக் & ஷேர்’. நட்சத்திரங்களுடனான நேர்காணல் தான் இந்த நிகழ்ச்சி என்றாலும், பிற நேர்காணல்கள் போல, சாதாரண கேள்விகளும், அனைத்து நேர்காணல்களிலும் கேட்கப்படும் ரெகுல் கேள்விகளும் என்று இல்லாமல், நேர்காணலில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் இதுவரை சொல்லாத தகவல்கள், பேசாத பிரச்சினைகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசுகிறார்கள்.
யுடியூபில் பிரபலமாக உள்ள விமர்சன ராஜா எனப்படும் பப்பு சுல்தான் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை சுஜா வாருணி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.