Latest News :

வேந்தர் டிவி-யின் புதிய நிகழ்ச்சி ‘ஆன்மீக நிகழ்வுகள்’

4300dc2ace93212adde386ce7cd6510f.jpg

வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆன்மீக நிகழ்ச்சி ‘ஆன்மீக நிகழ்வுகள்’.

 

ஆன்மீக நேயர்கள் அனைவருக்கும் நாடெங்கும் நடக்கும் ஆலய நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை அன்றன்றே கொடுக்கும் நிகழ்ச்சியாக இது  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய தர்காக்களும், இந்து கோயில்கள் இடம்பெறுகின்றன. இந்து ஆலயங்களில் நடக்கும் விசேஷ ஆராதனைகள், தினசரி விழாக்கள், மற்றும் கும்பாபிஷேகம் போன்றவற்றை அன்றன்றே பார்க்கும் விதமாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் ஆராதனைகள் மற்றும் பிரார்த்தனைகளோடு இஸ்லாமிய மசூதிகளில் நடைபெறும் வழிபாடுகள் மற்றும் தொழுகைகளும் இடம்பெறுகின்றன.

 

Gouwril Vishwanath

 

தமிழ்நாட்டில் தினமும் நடைபெறும் மும்மத விழாக்களை அனைவரும் கண்டு அருள்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒளிபரப்பாகும் இந்த ‘ஆன்மீக நிகழ்வுகள்’ ஆன்மீக நேயர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை வேந்தர் டிவி சார்பில் கௌரி விஸ்வநாதன் தொகுத்து வழங்குகிறார்.

Recent Gallery