நியூஸ்7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘சினிமேக்ஸ்’. சினிமேக்ஸ் என்றால் சினிமா மேக்சிமம். இந்நிகழ்ச்சி தினமும் இரவு 11:00 மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு அடுத்த நாள் மாலை 5:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
இதில் பாப்கார்ன் என்ற பகுதியில் நமது தமிழ் சினிமாவின் செய்திகள், நிகழ்ச்சிகள் அனைத்தும் இடம்பெறும். இது தவிர டி.பி.எம் என்கிற பகுதியில் அதாவது டோலிவுட் பாலிவுட் மல்லுவுட் எனப்படுகிற மூன்று திரை உலகங்களை சேர்ந்த தகவல்கள் இந்த பகுதியில் இடம்பெறும். அதேபோல ஸ்டாரும் காரும் என்ற பகுதியில் பிரபலங்கள் உபயோகப்படுத்திய கார் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை அளிக்கிறது.
மேலும் கிளாசிக் தருணங்கள் என்கிற இன்னொரு பகுதியும் இதில் இடம்பெறுகிறது. இதில் பிரபல இயக்குநர்கள் தங்களது திரையுலக பயணத்தில் நிகழ்ந்த சில முக்கிய தருணங்கள் பற்றி கூறுகிறார்கள். இந்நிகழ்ச்சியை பனிமலர் தொகுத்து வழங்குகிறார்.