முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ தமிழகம் மட்டும் இன்றி உலகைன் பல நாடுகளில் பிரபலமாக உள்ளது.
இதற்கிடையே, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியும் மக்களின் பேவரைட் நிகழ்ச்சியாக பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிய இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு நேற்று நிகழ்ந்தது.
இதில் வெற்றியாளராக ரித்திக் அறிவிக்கப்பட்டார். இது, அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தாலும், மக்களின் தீர்ப்பு இதுவா? என்ற கேள்வியும் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
காரணம், இந்த நிகழ்ச்சியில் பல கட்டங்களில் மக்களின் மனங்களை கவர்ந்த பாடகராக பூவையார் என்ற சிறுவன் திகழ்ந்தார். மேலும், சூப்பர் சிங்கர் என்ற பெயரில் பல போலி தளங்களில் நடத்திய கருத்துக்கணிப்புகளிலும் பூவையார் தான் வெற்றி பெற்றார். அப்படி இருக்கையில், விஜய் டிவி கருத்துக்கணிப்பில் மட்டும் அவர் எப்படி வெற்றி பெறவில்லை, என மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த போட்டியின் வெற்றியாளராக பூவையார் தான் வருவார், என்று பலர் எதிர்ப்பார்த்த நிலையில், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்திருப்பதால், எதிர்ப்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதோடு, விஜய் தொலைக்காட்சி ஒருதலை பட்சமாக வெற்றியார்களை தேர்வு செய்வதாக குற்றம் சாட்டியும் வருகிறார்கள்.
வாழ்த்துகள் ரித்திக்..! 👍👏 சூப்பர் சிங்கர் ஜூனியர் #GrandFinaleLive #SSJ #SSJGrandFinaleLive #NipponPaintSSJ @NipponIndia #Winner #Hrithik #VijayTelevision pic.twitter.com/isdTjkAU1c
— Vijay Television (@vijaytelevision) April 21, 2019