சேனல் உலகில் ரம்யாக்கள் சிலர் இருந்தாலும், சாட் வித் ரம்யா என்றால் அவ்வளவு பிரபலம்.. கடந்த நான்கு வருடங்களாக பெப்பர்ஸ் சேனலில் வெள்ளி கிழமை இரவு 9.00 மணிக்கு நேரலையாக இந்த ‘சாட் வித் ரம்யா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ரம்யா. இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் சீரியலில் கலக்கிய ரம்யா இப்போது லேட்டஸ்ட்டாக மாப்பிள்ளை சீரியலில் பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இதில் கல்லூரி பேராசிரியாக, எந்த மாப்பிள்ளையை பார்த்தாலும் பிடிக்காத கதாபாத்திரம் இவருக்கு. தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை மறுத்துவிட தன்னைவிட வயதில் இளையவரான அவரது தம்பியை விரும்பும் கேரக்டரில் வெளுத்து வாங்குகிறார் ரம்யா.
குறைந்த அளவிலான சீரியல், நிகழ்ச்சிகளை மட்டுமே ஒப்புக்கொள்ளும் ரம்யா, ஒரே சமயத்தில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் இன்னும் கூட ஒரு சீரியலில் அது பாசிடிவோ, நெகடிவோ எதுவானாலும் நடிக்க தயார் என்கிறார். சீரியலில் நடிப்பவர்களை பார்வையாளர்கள் அந்த கேரக்டர்களாகவே நினைத்து திட்டும் அளவுக்கெல்லாம் போய்விடுகிறார்களே என்றால் அது தவறான விஷயம் என்கிற வாதத்தை முன் வைக்கிறார் ரம்யா
“இது எப்படின்னா எம்.ஆர்.ராதாவையும் நம்பியாரையும் கெட்டவங்கன்னு சொல்ற மாதிரித்தான்.. சீரியலோ, படமோ அதில் வரும் கேரக்டரை அது நிஜத்திலும் அதேபோல எடுத்துக்கொள்ள கூடாது. எங்களை போன்ற நடிகர்கள் இதை விதவிதமான பரிமாணங்களில் நடிக்க கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம்”. என்கிறார்
சாட் வித் ரம்யா நிகழ்ச்சியில் விதம்விதமான மனிதர்கள், அவர்களின் விதம் விதமான பிரச்சனைகளுக்கு இதமான முறையில் உளவியல் பூர்வமாக பதில் கூறி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் ரம்யா. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ரம்யாவின் அணுகுமுறையும் ஒரு காரணம். இவர் படித்த சைக்காலஜி படிப்பு கவுன்சிலிங் கொடுப்பதற்கு பக்கபலமாக இருக்கிறது.
பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆண்கள் தான் அதிகம் ஆலோசனை கேட்பார்களே என்றால் உடனடியாக மறுக்கிறார் ரம்யா.. “நிச்சயமாக இல்லை. பெண்களும் சம அளவில் இந்த நிகழ்ச்சியில் தொடர்புகொண்டு பேசுகிறார்கள். ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் முதற்கொண்டு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பெண் வரை தங்களது உளவியல் ரீதியான பிரச்சனைகளை பகிர்ந்துகொள்கிறார்கள்” என்கிறார் ரம்யா.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதில் இருந்து ரம்யா உணர்ந்து கொண்டது என்னவென்றால் “ஆணோ, பெண்ணோ அவர்களுக்கு கல்வி அவசியம் தேவையான ஒன்று. பாதிக்கப்பட்ட பெண்கள் நிறைய பேர் பெரும்பாலும் கல்வியில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் வேலைக்கு செல்ல இயலாதவர்களாக, அதனால் பொருளாதார ரீதியாக ஆண்களை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் கல்வி முக்கியம் என்பதை அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்” என்கிறார் ரம்யா.
இன்னொரு சர்ப்ரைஸ் நியூஸ், பாலா டைரக்ஷனில் நாச்சியார் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.. “பாலுமகேந்திரா சாரின் டைரக்ஷனில் ‘தலைமுறைகள்’ படத்தில் நடித்துள்ளேன்.. அவரது பையன் மாதிரி தான் பாலா சாரும். அவர்கிட்ட கத்துக்கிட்டதால, பாலா சார் நடிப்புல என்ன எதிர்பார்ப்பார் அப்படிங்கிறதை ஓரளவுக்கு என்னால யூகிக்க முடிஞ்சது... பாலா சார் டைரக்சனில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது” என நாச்சியார் பற்றி சிலாகிக்கும் “நல்ல படங்களில் நடிக்கவேண்டும்.