வேந்தர் டிவியில் வருகின்ற தீபாவளி அன்று இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை சிரிப்பு சரவெடி என்ற நிகழ்ச்சி இடம் பெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் யூட்யூப்பில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது கலக்கி வரும் பிரபலங்கள் கலகலப்பாக தங்களுடைய அனுபவங்களை தொகுப்பாளர் பாலாஜி உடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி
ஐந்து வருடங்களுக்கு முன்பு யூடியூப் நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தபோது இவ்வளவு பிரபலம் கிடைக்கும் என்றும் இத்தனை வாய்ப்புகள் அமையும் என்றும் தங்கள் எதிர்பார்க்காத ஒன்று திரைத்துறையில் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் பற்றியும் அவர்களது எதிர்கால இலட்சியங்கள் பற்றியும் மிகவும் கலகலப்பான முறையில் பகிர்ந்துள்ளனர்
கண்டிப்பாக தீபத்திருநாள் அன்று இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொருவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை இந்த நிகழ்ச்சியில் சமீபத்திய வெற்றி திரைப்படங்களில் நடித்த யூடியூபர்கள் விஜய் வரதராஜ் ,ஷாரா, அன்பு, பாலாஜி தயாளன், ஆஷிக் ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நடிகை வசுந்தரா தமிழில் தென்மேற்கு பருவக்காற்று ஜெயம்கொண்டான் போராளி பேராண்மை பக்ரீத் என பல திரைப்படங்களில் அழகான கதாபாத்திரங்களில் ஏற்று நடித்தவர் வருகின்ற தீபாவளி திருநாள் அன்று வேந்தர் டிவியில் மாலை 4:00 மணிக்கு ஒளிபரப்பாகும் என் சினிமா காதல் என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய திரைப்பட ஆர்வம் திரைப்பட அனுபவங்கள் தன்னுடன் நடித்த நட்சத்திரங்கள் தான் எதிர் நோக்கி காத்திருக்கும் திரைப்படங்கள் திரைப்படத் துறையின் மீது தனக்கு ஏற்பட்ட அளவுகடந்த காதலைப்பற்றி சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இது.