Latest News :

நியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’

c79d498774cb8f82d75998d621dabdf9.jpg

அரசியல் தலைவர்களை நேருக்கு நேராக அமர்த்தி, அரசியல் சமூக பிரச்னைகள் ஆகியவை குறித்து அவர்களது நிலைப்பாடுகள், அது குறித்து எழுப்பபடும் ஐயங்கள் ஆகியவற்றை துல்லியமான கேள்விகள் மூலம் விவாதிக்கும் நிகழ்ச்சி "வியூகம் ’’. இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 9:00மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு  ஞாயிற்று கிழமை மாலை 3:00மணிக்கும் நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

தற்போதைய அரசியல் சூழல், கட்சிகளின் நிலைப்பாடு, மக்களின் எதிர்பார்ப்பு, களநிலவரம், கூட்டணி ஏற்பாடுகள், தொலைநோக்குத் திட்டங்கள், தேர்தல் வியூகங்கள்  உள்ளிட்ட  பல்வேற விஷயங்கள் குறித்து அரசியல் கட்சித்தலைவர்களிடம்  நேரடியாகக்  கேள்விகள் எழுப்பப்பட்டு விரிவான பதில்கள் பெறப்படும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாக, அரசியல் தலைவர்களின் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில்  அரசியலுக்கு  வந்தது எப்படி ?  இயல்பாக  நடந்ததா, விபத்தா , திட்டமிடலா  அல்லது கட்டாயமா என்பன போன்ற கேள்விகளும்  வியூகத்தில் இடம்பெறுகின்றன. 

 

கட்சித்தலைவர்களிடம் எளிய மக்கள் கேட்க நினைக்கும் கேள்விகள் யாவும் நியூஸ் 7தமிழ் குரலாக ஒலிக்கும் நிகழ்ச்சியே வியூகம் . இந்நிகழ்ச்சியை விஜயன் மற்றும் நெல்சன் தொகுத்து வழங்குகிறார். 

Recent Gallery