Latest News :

கலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

b8814a47b672d092a3ae182f08ed2ae2.jpg

வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபஒளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் உங்களை மகிழ்விக்கும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

காலை 8:00 மணிக்கு நகைச்சுவையும், நையாண்டியும் நிறைந்த தில்லு முல்லு சிறப்பு நிகழ்ச்சியும், காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், குடும்பத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி வாழ்வது ஆரோக்கியமா? ஆபத்தா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு மெகா ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, சாதனா நடிப்பில் பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்ற பேரன் புதிரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது. 

 

மதியம் 1:30 மணிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மிஷ்கின், ராம் உள்ளிட்ட சைக்கோ படக்குழுவினர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி மதியம் 2.30 மணிக்கு, சினிமாவில் சாதிக்க துடிக்கும் படைப்பாளிகளுக்கு மேடை

அமைத்துக் கொடுத்தளைய இயக்குனர் சீசன் 6-ன் இறுதிச் சுற்றும், மாலை 5.30மணிக்கு குழந்தைகள் மட்டுமே பங்கேற்று அசத்திய பசங்க காமெடி நிகழ்ச்சியையும் பார்த்து மகிழுங்கள். தீப ஒளித் திருநாள் தித்திப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.

Recent Gallery